திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முடிவுகளை அறிவிப்பதில் குளறுபடி... வீதிக்கு வந்து போராடிய திமுகவினர்

Google Oneindia Tamil News

Recommended Video

    முடிவுகளை அறிவிப்பதில் குளறுபடி... வீதிக்கு வந்து போராடிய திமுகவினர்

    திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் அதிகாரிகள் குளறுபடி செய்வதாக கூறி திமுகவினர் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அரை மணி நேரத்துக்கும் மேலாக திருச்சி- திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சுமார் 2 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இதையடுத்து அங்கு வந்த மணப்பாறை டி.எஸ்.பி. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்ல வைத்தார்.

    அமைதியாக அசத்தும் அமமுக.. அசராத அதிமுக.. விரட்டும் திமுக.. உள்ளாட்சி தேர்தலில் கலக்குவது யார்? அமைதியாக அசத்தும் அமமுக.. அசராத அதிமுக.. விரட்டும் திமுக.. உள்ளாட்சி தேர்தலில் கலக்குவது யார்?

    குளறுபடி

    குளறுபடி

    திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி குறிஞ்சி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒன்றியக் கவுன்சிலர் தேர்தல் முடிவை அறிவிக்காமல் அதிகாரிகள் காலதாமதம் செய்வதாக கூறி திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    முறைகேடு

    முறைகேடு

    ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளதாகவும் ஆனால் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை என்றும் திமுகவினர் புகார் கூறினர்.

    புனிதாவுக்கு 321.. எனக்கு 182 தானா.. தாங்கிக் கொள்ள முடியாத உஷா.. கண்ணீர் ததும்ப.. சோகக் காட்சி!புனிதாவுக்கு 321.. எனக்கு 182 தானா.. தாங்கிக் கொள்ள முடியாத உஷா.. கண்ணீர் ததும்ப.. சோகக் காட்சி!

    அரைமணி நேரம்

    அரைமணி நேரம்

    திமுகவினர் சாலைமறியல் போராட்டத்தால் கரட்டுப்பட்டியில் உள்ள குறிஞ்சி பொறியியல் கல்லூர் அருகே பதற்றம் உருவானது. மேலும், திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் இரு மருங்கிலும் சுமார் 2கி.மீ.தூரத்துக்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

    பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    திமுகவினரை கண்டித்து அதிமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டதால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டு இரண்டு தரப்பிடமும் மணப்பாறை டி.எஸ்.பி மற்றும் இன்ஸ்பெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து அவர்கள் கொடுத்த உறுதியை ஏற்று கலைந்து சென்றனர்.

    English summary
    dmk cadres road blockade in trichy district manapparai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X