திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிறையில் இருந்து சசிகலா வந்த உடன் எடப்பாடிக்கு இருக்கு.. உதயநிதி ஸ்டாலின் பரபர பேச்சு

Google Oneindia Tamil News

திருச்சி: சிறையிலிருந்து வரும் ஜனவரி 27ம் தேதி விடுதலையாகும் சசிகலா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆப்பு வைப்பார் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

 DMK youth secretary Udayanithi Stalin said that Sasikala will create problems for EPS

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பெயரில் சுற்றுபயணம் செய்து தேர்தல் பரப்புரை ஆற்றிவரும் உதயநிதி ஸ்டாலின், திருச்சி மாவட்டம், லால்குடியில் பொதுமக்கள் முன்பு பேசினார்

கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன்... இதில்தான் அரசு முதலிடம்... போட்டு தாக்கும் மு.க.ஸ்டாலின்!கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன்... இதில்தான் அரசு முதலிடம்... போட்டு தாக்கும் மு.க.ஸ்டாலின்!

அப்போது உதயநிதி பேசுகையில், மோடியா? லேடியா? என்று ஜெயலலிதா துணிச்சலாக கேட்ட நிலையில், மோடிதான் எங்க டாடி என்று சொல்லும் நிலையில் அதிமுகவினர் இருக்கிறார்கள். ஜெயலலிதாவை அதிமுகவினர் மறந்து விட்டனர்.

முதலமைச்சர் வேட்பாளரையே நாங்கதான் சொல்வோம் என்று பா.ஜ.க மாநில தலைவர் முருகன் சொல்லும் அளவுக்கு மோசமான நிலையில் அதிமுகவினர் உள்ளனர்.

 DMK youth secretary Udayanithi Stalin said that Sasikala will create problems for EPS

இபிஎஸ், ஓபிஎஸ் ஜெயலலிதாவிற்கும் விசுவாசமாக இல்லை. அவர்கள் சின்னம்மா என்று அழைத்த சசிகலாவுக்கும் விசுவாசமாக இல்லை. சிறையிலிருந்து ஜனவரி 27ம் தேதி விடுதலையாகும் சசிகலா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆப்பு வைப்பார்.

முதல்வர் ஜெயலலிதா 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பெற்ற நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். ஜெயலலிதா உயிரிழப்புக்கு அரசு விசாரணை கமிஷன் அமைத்து அது விசாரணை நிலையிலேயே உள்ளது. ஓபிஎஸ்யை நேரில் ஆஜராக விசாரணை கமிஷன் 9 முறை நோட்டீஸ் கொடுத்தும் ஆஜராக்வில்லை. எனவே திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஜெயலலிதா மரணத்திற்கான விடை தெரியும்" என்றார்.

English summary
DMK youth secretary Udayanithi Stalin has said that Sasikala, who will be released from jail on January 27, will create problems for Chief Minister Edappadi Palanichamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X