திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வள்ளுவரை வைத்து அரசியல் செய்யாதீர்கள்.. மக்கள் வெகுண்டு எழுவார்கள்.. சீமான் ஆவேசம்!

வள்ளுவரை வைத்து அரசியல் செய்யாதீர்கள், அப்படி செய்தால் மக்கள் வெகுண்டு எழுவார்கள் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    வள்ளுவரை வைத்து அரசியல் செய்யாதீர்கள் சீமான் ஆவேசம்!

    திருச்சி: வள்ளுவரை வைத்து அரசியல் செய்யாதீர்கள், அப்படி செய்தால் மக்கள் வெகுண்டு எழுவார்கள் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    தமிழக பாஜக கட்சியின் டிவிட்டர் பக்கம் திருவள்ளுவருக்கு காவி நிற உடை அணிவித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாஜக கட்சி தனது டிவிட்டில் திருவள்ளுவருக்கு காவி உடை கொடுக்கப்பட்டு இருக்கிறது. திருவள்ளுவர் இத்தனை வருடங்கள் வெள்ளை உடையில் மட்டும்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் தமிழக பாஜக கட்சியின் கட்சியின் டிவிட்டர் பக்கம் திருவள்ளுவருக்கு காவி நிற உடை அணிவித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தமிழகம் முழுக்க பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    கமல் செய்யாத சாதனையா? ரஜினி பாஜகவின் நண்பர்.. அதனால்தான் விருது தராங்க.. சீமான் கிண்டல்!கமல் செய்யாத சாதனையா? ரஜினி பாஜகவின் நண்பர்.. அதனால்தான் விருது தராங்க.. சீமான் கிண்டல்!

    கோபம்

    கோபம்

    இது தொடர்பாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்துள்ள பேட்டியில், திருவள்ளுவரையும், திருக்குறளையும் பாஜக அவமானப்படுத்திவிட்டது. உலக பொதுமறை தந்த திருவள்ளுவரை காவியடித்து தன்னுடைய கட்சிக்குள் சேர்க்க நினைப்பது மிக மோசமானது. தமிழர்கள் ஒரு பண்பட்ட நாகரீகத்தை சேர்ந்தவர்கள். அவர்களை அவமானப்படுத்த கூடாது.

    போராட்டம் செய்வோம்

    போராட்டம் செய்வோம்

    அவர்கள் வீதியில் இறங்கி போராட வெட்கப்படுவார்கள். அதை காரணமாக வைத்து தமிழர்களை இழிவுபடுத்த வேண்டும் என்று நினைக்க கூடாது. தமிழர்கள் ஒரு அளவிற்குதான் அமைதியாக இருப்பார்கள். பிரச்சனை வந்தால் வெகுண்டு எழுவார்கள்.

    கைது செய்ய வேண்டும்

    கைது செய்ய வேண்டும்

    தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்திருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். பா.ஜ.க.வை சேர்ந்த எச். ராஜா திருவள்ளுவரை இந்து புலவர் கூறி இருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. திருக்குறளில் இந்து என்பதே இல்லை.

    அரசியல் செய்ய வேண்டும்

    அரசியல் செய்ய வேண்டும்

    வள்ளுவரை வைத்து அரசியல் செய்யாதீர்கள். அவர் அனைவருக்கும் பொதுவானவர். அவரை இப்படி கலங்கப்படுத்த கூடாது. இதற்கு உடனடியாக தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Don't politicize Thiruvalluvar, People won't accept it says, Naam Tamilar Seeman.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X