திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டீக்கடை குப்பையா.. கீழே போடாதீங்க.. நாங்க வாங்கிக்கிறோம்.. திருச்சி மாநகராட்சி பலே!

Google Oneindia Tamil News

திருச்சி: டீக்கடைகள் உள்ளிட்ட சிறிய கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை மாநகராட்சியே சேகரித்து கொள்ளும் என்றும், டிசம்பர் 1-ந்தேதி முதல் பெரிய ஓட்டல்கள், நிறுவனங்களின் குப்பைகளை மாநகராட்சி லாரிகள் எடுக்காது என்றும் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

குப்பைகள் கண்ட இடங்களில் கொட்டப்படுவது என்பது நம்மூர்களில் சாதாரணமான ஒன்று. பிளாஸ்டிக் குப்பைகளை தனியாகவும் மற்ற குப்பைகளையு தனியாகவும் போடும் வழக்கத்தை இன்னும் நம்மால் கொண்டுவரஇயலவில்லை. இதற்கு காரணம் போதிய விழிப்புணர்வு இல்லாது ஒருபுறம் எனில், அக்கறையின்மை மறுபுறம் ஆகும்.

இந்நிலையில் திருச்சி மாநாகராட்சி குப்பைகளை சேகரிப்பதில் வித்தியாசமான முயற்சிகளை ஆரம்பிக்க உள்ளது. இதன்படி டீக்கடைகள் உள்ளிட்ட சிறிய கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை மாநகராட்சியே சேகரிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கண்டஇடங்களில் குப்பை கொட்டுவது தடுக்ககப்படுவதுடன், டீக்கடை குப்பைகள் உரத்திற்கும் மிகப்பெரிய பயனுள்ளதாக இருக்க போகின்றன

மாநகராட்சி ஆணையர்

மாநகராட்சி ஆணையர்

இது குறித்து புதிதாக திருச்சி மாநகராட்சி ஆணையராக பதவியேற்றுள்ள சிவசுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில், "திருச்சி மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்று ஒரு வார காலம் தான் ஆகிறது. மாநகர பகுதியை தூய்மைப்படுத்தும் பணியை வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும் என்பதற்காக பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் பேசி வருகிறேன்.

50 ஆயிரம் மாணவர்கள்

50 ஆயிரம் மாணவர்கள்

மாணவர்களின் வீட்டுப்பாட நோட்டுகளில் குப்பைகளை பிரித்து வழங்க பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும், மரங்கள் வளர்க்க வேண்டும், பிளாஸ்டிக் பைகளை சாலையில் போடக்கூடாது என்று எழுதி உள்ளேன். மாநகராட்சி அதிகாரிகளும் இந்த பணிகளை செய்து வருகிறார்கள். இதுவரை சுமார் 50 ஆயிரம் மாணவர்களை இந்த விழிப்புணர்வு நடவடிக்கை சென்றடைந்து உள்ளது.

குப்பை சேகரிப்பு

குப்பை சேகரிப்பு

கோவில், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள் ஆகிய வழிபாட்டு தலங்களிலும் குப்பை சேகரிப்பு தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ரோட்டரி, லயன்ஸ் போன்ற சேவை நிறுவனங்களிடமும் மாநகரை தூய்மையாக வைத்துக்கொள்ள எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி பேசி வருகிறேன். மேலும் மாநகராட்சியின் வருவாயை பெருக்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

பெரிய ஓட்டல்கள்

பெரிய ஓட்டல்கள்

திருச்சி மாநகராட்சி பகுதியில் தினமும் சுமார் 320 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த குப்பைகளில் சுமார் 30 சதவீதம் பெரிய ஓட்டல்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் பெரிய நிறுவனங்களிடம் இருந்து சேகரிக்கப்படுபவை ஆகும். வருகிற டிசம்பர் மாதம் 1-ந்தேதி முதல் இந்த குப்பைகளை எடுக்க லாரிகள் அனுப்பப்படாது. அந்த நிறுவனங்களை சேர்ந்தவர்களே அவர்களது வளாகத்தில் சேரும் குப்பைகளை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உரமாக்கி கொள்ள வேண்டும். 100 கிலோவுக்கு மேல் குப்பை சேரும் நிறுவனங்களுக்கு இது பொருந்தும்.

நேரடியா வந்து வாங்கும்

நேரடியா வந்து வாங்கும்

அதே நேரத்தில் டீக்கடைகள் உள்ளிட்ட சிறிய கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை மாநகராட்சியே சேகரித்து கொள்ளும். மாநகராட்சி பகுதியில் வசிக்கும் அனைத்து குடியிருப்புதாரர்களும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரண்டாக பிரித்து வழங்க வேண்டும். அதனை மாநகராட்சி பணியாளர்கள் தினமும் வீடு தேடி வந்து சேகரித்து செல்வார்கள். பெரிய நிறுவனங்களின் குப்பைகளை இதுவரை சேகரித்து வந்த துப்புரவு பணியாளர்களும் இனி குடியிருப்பு பகுதிகளுக்கு திருப்பி விடப்படுவார்கள்.

இளைஞர்கள் தயார்

இளைஞர்கள் தயார்

துப்புரவு பணியாளர்களுக்கு தினக்கூலி ரூ.360 வழங்கப்படுகிறது. இந்த வேலையை செய்ய இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களை வேலைக்கு அமர்த்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநகராட்சி தயாராக உள்ளது. மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து சாக்கடை கால்வாய்களும் 10 நாட்களில் தூர்வாரப்படும். மூன்றாம் கட்ட பாதாள சாக்கடை திட்டப்பணி முடிவடைந்த பின்னர் தான் புதிதாக சாலைகள் அமைக்கப்படும். அதற்கு முன்பாக மோசமான நிலையில் உள்ள சாலைகள் தற்காலிகமாக சீரமைக்கப்படும்" என்று கூறினார்.

English summary
Trichy Municipal Corporation said don't throw waste, we collect them
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X