திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்த 3 விஷயம்தான் எனக்கு அங்கே பிடிக்கல.. அதான் வந்துட்டேன்.. பாரிவேந்தர்

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்த 3 விஷயம்தான் எனக்கு பிடிக்கல: பாரிவேந்தர் -வீடியோ

    திருச்சி: "போக கூடாத இடத்துல போய் சேர்ந்துட்டேன்.. ஆனா இந்த 3 விஷயத்துக்காகத்தான் அங்கிருந்து வெளியே வந்துட்டேன்" என்று பாஜக குறித்து ஐஜேகே கட்சி தலைவர் பாரிவேந்தர் வெளிப்படையாக காரணங்களை அடுக்கி உள்ளார்.

    கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தவர் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர். ஆனால் சில காலமாகவே அக்கட்சியிலிருந்து விலகியே இருந்தார். பாஜகவின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றும், மரியாதை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்து வந்தார்.

    இந்நிலையில், திமுக கூட்டணியில் இணைந்து பெரம்பலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். நேற்று முசிறி பகுதியில் இவரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலினும் பிரச்சாரம் செய்தார். அந்த கூட்டத்தில் பாரிவேந்தர் சில விஷயங்களை மனம் விட்டு பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:

    ராமலிங்கம் - மயிலாடுதுறை திமுக வேட்பாளர்: ஒரே தொகுதியில் தொடர்ந்து 4 முறை வென்ற வேட்பாளர்! ராமலிங்கம் - மயிலாடுதுறை திமுக வேட்பாளர்: ஒரே தொகுதியில் தொடர்ந்து 4 முறை வென்ற வேட்பாளர்!

    மாயை

    மாயை

    "பெரம்பலூர் எனக்கு புதிய ஊர் அல்ல. எனது மூதாதையர் வாழ்ந்த ஊர். நான் போக கூடாத இடத்திற்கு போய் சேர்ந்தேன். அந்த இடத்தில் நான் எதிர்பார்த்தது எதுவுமே நடக்கவில்லை. தாய், தந்தையை மறந்து விட்டு, ஏதோ ஒரு மாயை நம்பி சென்று விட்டேன்.

    குறுசிறு வேலைகள்

    குறுசிறு வேலைகள்

    ஏன் கால தாமதமாக வந்தேன் என்றால் 2 ஆண்டுகள் நல்லது ஏதாவது செய்வார்களா என்று காத்திருந்தேன். இந்திய சுதந்திரத்தை எப்படி ஒரு நாள் இரவு பெற்றோமோ, அதே போல 2016 பணம் மதிப்பிழப்பு காரணமாக நம்மை எல்லாம் சுதந்திரத்தை இழக்க செய்து விட்டது. மேலும் 2017 ஆண்டு ஜிஎஸ்டி வரி விதித்து இளைஞர்கள் செய்த குறுசிறுவேலையை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    நீலகிரியில் ஆ.ராசாவை வீழ்த்த அணி திரளும் அதிமுக

    4 மாவட்டங்கள்

    4 மாவட்டங்கள்

    2018 தமிழ்நாட்டிலே 4 மாவட்டங்களில் கஜா புயல் தாக்கியபோது திமுக தலைவர் ஸ்டாலின் ஓடோடி வந்து நிவாரணம் கொடுத்தார். நானும் என் தரப்பில் இருந்து அந்த பகுதியில் இருந்து என்னுடைய கல்வி நிறுவனங்களில் படிக்கும் சுமார் 650 மாணவர்களுக்கு 4 ஆண்டுகள் கல்வி கட்டணத்தை ரத்து செய்தேன். ரத்து செய்த கல்வி கட்டணத்தின் மதிப்பு 48 கோடி ஆகும்.

    மக்களுக்கு பாதிப்பு

    மக்களுக்கு பாதிப்பு

    ஆனால் மத்திய அரசு இந்த கஜா புயலை குறித்து எந்த நிவாரணமும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த 3 காரணங்களே அந்த கூட்டணியில் இருந்து வெளியே வருவதற்கு காரணம். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதை தள்ளிப்போட கூடாது. தள்ளிப்போட்டால் மக்களுக்கு தான் பாதிப்பு" என்றார்.

    English summary
    IJK Leader Paarivendhar has explained why he was leaving for the BJP coalition.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X