திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மானமுள்ளவர்கள் தான் மான நஷ்ட வழக்கு தொடர வேண்டும்.. முதல்வர் மீது ஈவிகேஎஸ் காட்டம்

தமிழக முதல்வரை ஈவிகேஎஸ் இளங்கோவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Google Oneindia Tamil News

திருச்சி: "என் மேல மானநஷ்ட வழக்கு தொடர தமிழக முதல்வருக்கு எந்த அருகதையும் இல்லை, ஏனென்றால் மானமுள்ளவர்கள்தான் மான நஷ்ட வழக்கு தொடர வேண்டும்" என்று என ஈவிகேஎஸ் இளங்கோவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த ஆகஸ்டு 26-ம் தேதி முக்கொம்பு கொள்ளிடம் அணை உடைந்தது தொடர்பாக தமிழக அரசையும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் தரக்குறைவாக பேசியதாக அதிமுக அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இது சம்பந்தமான விசாரணை இன்று திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணைக்காக ஈவிகேஎஸ். இளங்கோவன் கோர்ட்டில் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சொன்னதாவது:

அருகதை இல்லை

அருகதை இல்லை

தமிழக முதல்வர் என் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். என் மீது மானநஷ்ட வழக்கு தொடர அவருக்கு எந்த அருகதையும் இல்லை. ஏனென்றால் மானமுள்ளவர்கள்தான் மான நஷ்ட வழக்கு தொடர வேண்டும்.

கொலை வழக்கு

கொலை வழக்கு

நான் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கையே சந்தித்தவன். இப்படியெல்லாம் வழக்கு போட்டு என்னை யாரும் மிரட்ட முடியாது. இதுவரைக்கும் இந்த ஆட்சியின் ஊழல்கள் குறித்து மட்டும்தான் பேசி வந்தேன்.

கொலை வழக்கு

கொலை வழக்கு

இனி கொடநாடு கொலைகள் குறித்தும், 30 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை வழக்கு குறித்தும் பேசுவேன்.
அதற்கும் என் மீது வழக்கு தொடர்ந்தால் அதையும் சந்திப்பேன்.

அருகதை இல்லை

அருகதை இல்லை

தமிழகத்தில் காமராஜர் பெயரை கூறினால் வெற்றி பெற்று விடலாம் என நினைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. காமராஜர் பெயரை சொல்ல மோடிக்கு எந்த அருகதையும் கிடையாது. காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தபோது அவரை கொல்ல முயற்சித்த பாசறையில் இருந்தவர்களுக்கு எல்லாம் என்ன தகுதி இருக்கிறது அவரை பற்றி பேச?" என்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

English summary
EVKS Ilangovan criticized CM Edappadi Palainisamy very badly in Trichy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X