திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கசமுசா கேஸ்கள்".. ஜெயலட்சுமியையே ஏமாத்திட்டாங்களாமே.. அட காலக் கொடுமையே.. மிரண்டு போன போலீஸ்!

சிவகாசி ஜெயலட்சுமி நிதி நிறுவனம் மோசடி குறித்து புகார் தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்று ஜெயலட்சுமி, திருச்சியில் 2வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஜெயலட்சுமி - அதே சிவகாசி ஜெயலட்சுமிதான்.. ஒட்டுமொத்த போலீஸையும் ஏமாற்றி ஏப்பமிட்ட ஜெயலட்சுமி..

கொரோனா தடுப்பூசி 'சாதனை' சட்டென மறுநாளே சரிந்தது ஏன்? பாஜக ஆளும் 7 மாநிலங்களின் மீது சந்தேகம்? கொரோனா தடுப்பூசி 'சாதனை' சட்டென மறுநாளே சரிந்தது ஏன்? பாஜக ஆளும் 7 மாநிலங்களின் மீது சந்தேகம்?

போலீஸ் உயர் அதிகாரிகள் முதல் ஏட்டுக்கள் வரை பாலியல் குற்றச்சாட்டை கூறி பரபரப்பைக் கிளப்பியவர்.. அன்றைய பத்திரிகைகளில் தலைப்பு செய்திகளாக பலமுறை இடம்பிடித்தவர்.

புகார்

புகார்

ஜெயலட்சுமி பெயரை கேட்டாலே போலீஸ் துறையே அன்று கதறியது.. காரணம், போலீஸ் கெட்டப் போட்டே இவர் பலரை ஏமாற்றியவர்.. பணத்தை கறந்தவர்.. மோசடிகளை செய்தவர்.. சிவகாசி ஜெயலட்சுமி என்றால் 20 வருஷங்களுக்கு முன்பு ஃபேமஸ்.. அதற்கு பிறகு இவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை.. இப்போது மறுபடியும் ஒரு புகாருடன் என்ட்ரி ஆகி உள்ளார்.

 மோசடி

மோசடி

இவரை யாரோ ஏமாற்றிவிட்டார்களாம்.. திருச்சி மன்னார்புரத்தில் உள்ள எல்பின் நிதி நிறுவனத்தில் 3 கோடியே 75 லட்சம் ரூபாய் முதலீடு செய்தாராம்.. ஆனால், இந்த நிறுவனம் பணத்தை திருப்பி தரவில்லை என்று பகீரை கிளப்பி உள்ளார்.. அதுமட்டுமல்ல, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்துக்கு நேரடியாகவே வந்துவிட்டார் ஜெயலட்சுமி.. வந்தவர், அந்த ஆபீஸ் வாசலிலேயே உட்கார்ந்துவிட்டார்.

 தர்ணா

தர்ணா

தன்னுடைய பணத்தை திருப்பி தராவிட்டால் இங்கிருந்து போகமாட்டேன் என்று அடம்பிடித்து ராத்திரி வரை அங்கேயே உட்கார்ந்துவிட்டார். இந்த விஷயம் தெரிந்து போலீசார் விரைந்து வந்து, சமாதானப்படுத்தி ஜெயலட்சுமியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.. ஆனால், ஜெயலட்சுமி இன்று காலை மறுபடியும் வந்து அதே இடத்தில் தர்ணாவில் உட்கார்ந்துவிட்டார்..

 மக்கள் கூட்டம்

மக்கள் கூட்டம்

அந்த பணம் எல்லாம் இவருடையது மட்டுமில்லையாம்.. 700-க்கும் மேற்பட்டோருடைய பணமாம்.. அவர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை என்பதால், பணத்தை தந்தே ஆக வேண்டும் என்று கறாராக பேசினார். இந்த பணமோசடி பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும், ரொம்ப நாள் கழித்து ஜெயலட்சுமியை பார்க்க பொதுமக்கள் அங்கு திரண்டனர்.. தர்ணா செய்த ஜெயலட்சுமியைவிட, இவரை வேடிக்க பார்க்க வந்தவர்களை சமாளிக்கவே போலீசாருக்கு ஓவர் டியூட்டி ஆகிவிட்டதாம்..!

English summary
Ex accused Sivakasi Jayalakshmi complaint against Trichy financial institution
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X