திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டீச்சரை மிரட்டி விரட்டி கடத்திய வணக்கம் சோமு.. கொரோனா பீதியில் போலீசில் சரண்.. திருச்சியில் பரபரப்பு

திருச்சி வணக்கம் சோமு போலீசில் சரணடைந்தார்

Google Oneindia Tamil News

திருச்சி: டீச்சரை மிரட்டி விரட்டி கடத்திய அதிமுக பிரமுகர் வணக்கம் சோமு இன்று கோட்டை போலீசில் சரணடைந்தார்.. கொரோனா பீதி தலைதூக்க உள்ளதால் உயிர் பயம் காரணமாகவே, 7 மாத தலைமறைவுக்கு பின்பு இன்று சரணடைந்துள்ளார் என கூறப்படுகிறது.. இது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வணக்கம் சோமு - இவர் திருச்சி பிரமுகர்.. மறைந்த ஜெயலலிதா மீது ஏற்பட்ட அதீத ஈர்ப்பின் காரணமாக 2009-ல் அதிமுகவில் இணைந்தார். கடுமையாக பணியாற்றினார்.

இவரது செயல்பாடுகளை கண்டு வியந்த தலைமை, திருச்சி மாநகர் மலைக்கோட்டை பகுதி பொருளாளர் பதவியும் அன்று கொடுத்தது. அப்போதுதான் திருச்சி மாவட்டத்தில் பிரபலம் ஆனார்.

மகாலட்சுமி

மகாலட்சுமி

இவர் மீது 7 மாசத்துக்கு முன்பு அதாவது செப்டம்பர் 30ம் தேதி ஒரு டீச்சரை கடத்திவிட்டார் என்ற புகார் எழுந்துள்ளது. தனியார் பெண்கள் கல்லூரியில் பணியாற்றும் அந்த ஆசிரியை பெயர் மகாலட்சுமி. மலைக்கோட்டை நயினார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகாலட்சுமி.. இந்திரா காந்தி கல்லூரியில் ஆங்கிலதுறை பேராசிரியை.

மீட்டனர்

மீட்டனர்

சம்பவத்தன்று காலை காலேஜுக்கு மகாலட்சுமி நடந்து சென்று கொண்டிருந்தபோது ஆம்புலன்சில் காத்திருந்த நபர்கள் பேராசிரியர் மகாலட்சுமியை கடத்திச் சென்றதாக கூறப்பட்டது. ஆம்புலன்ஸ் சென்றபோது, மகாலட்சுமி அலறி சத்தம் போடவும் அக்கம்பக்கத்தினர் திரண்டு வருவதற்குள் அவரை துவரங்குறிச்சி என்ற இடத்தில் இறக்கி விட்டு கடத்தல்காரர்கள் பறந்தனர்.

விசாரணை

விசாரணை

இதன்பின்னர், மகாலட்சுமி போலீசுக்கு புகார் சொல்லியதையடுத்து விசாரணை ஆரம்பமானது.. அப்போதுதான் வணக்கம் சோமு கடத்தலில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது... வணக்கம் சோமுவுக்கு டீச்சர் மீது ஒரு தலைக்காதல் இருந்துள்ளது. அவர், எங்கெங்கு போகிறாரோ, அங்கெல்லாம் பின்னாடியே சென்று வணக்கம் சோமு தகராறும் செய்திருக்கிறார். பலமுறை மகாலட்சுமி டீச்சர் இதற்கு எதிர்ப்பு காட்டியும் அவர் தன்னை மாற்றி கொள்ளவில்லை.

பதவி நீக்கம்

பதவி நீக்கம்

ஏற்கனவே கல்யாணம் ஆகி, காலேஜ் படிக்கிற அளவுக்கு ஒரு மகளும் வணக்கம் சோமுவுக்கு உள்ள நிலையில்தான் டீச்சர் மீது லவ் வந்து, கடத்தல் வரை சென்றது திருச்சி அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அதிமுக தலைமை அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்தது... ஆனால் அப்போதே வணக்கம் சோமு தலைமறைவாகி விட்டார்.

சரண்

சரண்

அவரை கோட்டை போலீசாரும் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், 7 மாத தலைமறைவுக்கு பின் இன்று அவர் கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். நாடு முழுவதும் கொரோனா பரவுவதால், உயிர் பயம் காரணமாக வணக்கம் சோமு சரணடைந்ததாக கூறப்படுகிறது. தொடர் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

English summary
ex admk surrender about woman professor kidnaping case in trichy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X