திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கர்ப்பிணிதான்.. ஆனால் நாங்களும் நல்லா ஓடுவோம் சார்.. ப்ளீஸ் அனுமதி கொடுங்க.. ஸாரி ரிஜக்டட்!

உடல் தகுதி தேர்வுக்கு வந்த 5 கர்ப்பிணிகள் நிராகரிக்கப்பட்டனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    pregnant women reject physical qualification ! உடல் தகுதி தேர்வுக்கு வந்த 5 கர்ப்பிணிகள் !

    திருச்சி: "கர்ப்பிணிதான்.. நாங்களும் நல்லா ஓடுவோம் சார்.. எங்களுக்கும் அனுமதி கொடுங்க" என்று பெண் காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வுக்கு வந்த 5 கர்ப்பிணிகள் கண்கலங்கி அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.

    தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் பெண்களுக்கான காவலர் தேர்வு திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் துவங்கி உள்ளது.

    five pregnant women reject in firearms grounds physical qualification

    திருச்சி மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் அமல்ராஜ், திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன், பெரம்பலூர் எஸ்பி நிஷாபார்த்திபன் ஆகியோர் மேற்பார்வையில் இந்த உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.

    முதல்கட்டமாக 700 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 634 பேர் மட்டுமே உடல் தகுதித்தேர்வில் கலந்து கொண்டனர். முதலில் அவர்களின் கல்விச்சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. பிறகு அவர்களின் உயரம் அளக்கப்பட்டு, ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கு 5 கர்ப்பிணிகளும் வந்திருந்தனர். ஆனால் அவர்களின் உடல்நலனை கருதி அவர்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.

    தம்பிதுரையை கட்டாயப்படுத்தி கரூருக்கு அனுப்பிய இ.பி.எஸ்... காரணம் என்ன?தம்பிதுரையை கட்டாயப்படுத்தி கரூருக்கு அனுப்பிய இ.பி.எஸ்... காரணம் என்ன?

    ஆனால், தங்களையும் ஓட்டத்தில் அனுமதிக்கும்படி கர்ப்பிணிகள் வாக்குவாதத்தில் அதிகாரிகளுடன் ஈடுபட்டனர். நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும், அதிகாரிகள் கர்ப்பிணிகளை அனுமதிக்கவில்லை.. இதனால் 5 கர்ப்பிணிகளும் சிறிது நேரம் கண்கலங்கியபடி நின்று கொண்டிருந்தனர்.. பிறகு சோகத்துடன் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

    இதேபோல, திருவானைக்காவலை சேர்ந்த ஒரு பெண் கைக்குழந்தையுடன் தேர்வுக்கு வந்திருந்தார். அவரது உயரம் அளக்கப்பட்டது.. உயரம் குறைவாக இருந்ததாக நிராகரிக்கப்பட்டார். ஆனால், அவர் தான் சரியான உயரம்தான் என அங்கிருந்த அதிகாரிகளிடம் சென்று முறையிட்டார். இதையடுத்து, டிஐஜி முன்னிலையில் எலக்ட்ரானிக் மெஷினில் அவரது உயரம் சரிபார்க்கப்பட்டது. அப்போது அவர் உயரம் சரியாக இருக்கவே தேர்வில் அனுமதிக்கப்பட்டார்.

    English summary
    5 pregnant women reject in firearms grounds physical qualification by trichy officials
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X