வளர்த்த கடா..ஒரே நேரத்தில் ‘மூன்று குதிரை’யில் சவாரி! அதிமுக அழிக்கும் ஓபிஎஸ்..! பற்றவைத்த பரஞ்சோதி!
திருச்சி : திமுக தலைவர் ஸ்டாலின், சசிகலா, டிடிவியை நம்பி அரசியல் செய்கிறார் ஓபிஎஸ் இது எடுபடாது எனவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து கொண்டு ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை அழிக்க துடிக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சரும், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான பரஞ்ஜோதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
Recommended Video
ஒற்றைத் தலைமை தொடர்பாக அடுத்தடுத்த நகர்வுகள் அதிமுகவில் என்ன நடக்கவிருக்கும் என்று எதிர்பார்த்திருக்கும் நிலையில், இன்று சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சி அலுவலகத்தில்அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
போனை கூட எடுக்கல! எடப்பாடியை டென்ஷனாக்கிய 6
இந்த கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பொறுப்புகளை வகித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் அவற்றிலிருந்து நீக்கப்படுவார் எனவும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதிமுகவில் பிரச்சினை
மேலும், இடைக்கால பொருளாளராக கேபி முனுசாமி, அல்லது ஜெயக்குமார் ஆகியோர் நியமிக்கப்படலாம் எனவும், எதிர்கட்சி துணைத் தலைவராக ஒரு சட்டமன்ற உறுப்பினர் நியமன அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது போன்ற அதிரடி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் ஓ.பி.எஸ். பொருளாளர் பதவியில் நீடிப்பாரா என்பதெல்லாம் பொதுக்குழு எடுக்க வேண்டிய முடிவு எனவும், பொதுக்குழு தொடர்பான ஆலோசனையே தற்போது நடைபெற்றது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி
இந்நிலையில் திமுக ஸ்டாலின், சசிகலா, டிடிவியை நம்பி அரசியல் செய்கிறார் ஓபிஎஸ் இது எடுபடாது என முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சரும், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான பரஞ்ஜோதி,"திமுக ஆட்சியை கொண்டு வர ஒற்றை தலைமை மீண்டும் தேவை.

எடப்பாடிக்கு ஆதரவு
மாவட்ட செயலாளர்களில் 2 பேர் தவிர 75 மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ஒற்றை தலைமை வரவேண்டும் என கோரிக்கையை முன்வைத்துள்ளோம். மேலும் இதனை வலியுறுத்தியே பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் கோரிக்கையை எழுப்பினர். நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடிக்கு ஆதரவு உள்ளதை தெளிவாக வெளியாக உள்ளது.

சசிகலாவை நம்பி அரசியல்
ஓபிஎஸ் பொதுக்குழு கூட்டத்தை நிறுத்த தமிழக காவல்துறை தலைவர், பிஜேபி திருமண மண்டப உரிமையாளருக்கும் கடிதம் எழுதுவதன் மூலம் அதிமுகவை அழிக்க துடிக்கிறார். அவர் ஸ்டாலின், TTV, சசிகலாவை நம்பி அரசியல் செய்கிறார். ஓபிஎஸ்-ன் ஆசை ஒருபோதும் நிறைவேறாது" என கடுமையாக கடுமையாக விமர்சித்துள்ளார். இதே திருச்சி மாவட்ட தெற்கு செயலாளரான வெல்லமண்டி நடராஜன் ஓபிஎஸ்க்கு ஆதரவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.