திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருச்சி தேசியக் கல்லூரியில் 100அடி உயர தேசியக் கொடி கம்பத்துக்கு கணபதி பூஜை.. பூமி பூஜை

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி தேசியக் கல்லூரியில் 100அடி உயரமான தேசியக் கொடி கம்பத்திற்கு கணபதி பூஜை மற்றும் பூமி பூஜை நடந்தது.

திருச்சி தேசியக் கல்லூரி 1919ஆம் வருடம் துவங்கப்பட்டு நூறு ஆண்டுகளாக ஏழை எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கு கல்வி பணி ஆற்றுகிறது. நுறு வருடம் நிறைவு பெற்றதைப் போற்றும் வகையில் 100அடி உயரமான தேசியக் கொடி கல்லூரி வளாகத்தில் என முடிவு செய்யப்பட்டுள்ளது அதன் துவக்கமாக நேற்று காலை 9.30 மணிக்கு கணபதி பூஜை மற்றும் பூமி பூஜை நடைபெற்றன.

Ganapathi Pooja held for a 100 feet high national flag at the Trichy National College

இந்த பூஜையின் சமயம் கல்லூரியின் சார்பாக சங்கல்பத்தை கல்லூரி முதல்வர் முனைவர் சுந்தரராமன் ,பேராசிரியர்கள், மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். அனைத்து ஏற்பாடுகளுக்கும் முனைவர் விஐய சங்கர் ,முனைவர் பிரசன்ன பாலாஜி, முனைவர் ஜாபிர் ,முனைவர் செந்தில் உறுதுணையாக இருந்தனர்.

மேலும் கல்லூரியின் வளாகத்தில் இயங்கி வரும் வேத பாடசாலையின் மாணவர்கள் முனைவர் அநந்த நாராயணன் தலைமையில் வேத மந்திர கோஷத்துடன் பூஜை இனிதே நிறைவு பெற்றது பூஜையின் சமயத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

முதுநிலை மருத்துவ மேற்படிப்பு- பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறித்த மத்திய அரசு- வைகோ சாடல்முதுநிலை மருத்துவ மேற்படிப்பு- பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறித்த மத்திய அரசு- வைகோ சாடல்

இந்த கொடி கம்பத்தை முடித்து தருவதற்கு திருச்சி விந்தியா எலக்ட்ரிக்கல்ஸ் உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கல்லூரி தலைவர் முனைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் செயலாளர் கே.ரகுநாதன் வாழ்த்தினார்கள்.

English summary
Ganapathi Pooja and Bhoomi Pooja were held for a 100 feet high national flag at the Trichy National College
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X