திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முருகனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா.. கடைசில இப்படி கோர்த்து விட்டுட்டானே.. கதறும் கணேசன்!

முருகனை அதிகம் நம்பியதாக கணேசன் வாக்குமூலம் அளித்துள்ளான்

Google Oneindia Tamil News

Recommended Video

    Lalitha Jewellery Theif Murugan story Revealed

    திருச்சி: "நான் இந்த முருகனை எவ்ளோ நம்பனேன் தெரியுமா.. கடைசியில இப்படி என்னை கோர்த்து விட்டுருவான்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கல" என்று கைதான கணேசன் கேங் லீடர் முருகனை பற்றி புலம்பி உள்ளான்!

    லலிதா ஜூவல்லரி கொள்ளையில் முக்கிய குற்றவாளியே திருவாரூர் கொள்ளையன் முருகன்தான்.. லலிதா ஜுவல்லரி கொள்ளையில் முருகனிடம் இப்போது விசாரணை நடந்து வருகிறது.

    இந்த கொள்ளையில் அடுத்து சிக்கிய பெரிய புள்ளி கணேசன். மதுரை பள்ளப்பட்டியை சேர்ந்தவன். ஜுவல்லரி கடையில் முருகனுடன் சேர்ந்து ஓட்டை போட்டது இந்த கணேசன்தான்.

    யாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..!யாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..!

    6 கிலோ நகைகள்

    6 கிலோ நகைகள்

    சிசிடிவி வீடியோவை போலீசார் வெளியிட்டபோது, கடைக்குள் முருகனுடன் சேர்ந்து நடமாடியது இந்த கணேசன்தான்.. மதுரையில் இந்த கணேசனை போலீசார் அப்படியே அமுக்கி கைது செய்து, கொண்டு வந்து விசாரித்து வருகிறார்கள். மேலும் அவனது பங்கு 6 கிலோ நகைகளையும் போலீசார் மீட்டுள்ளனர்.

    கொள்ளை

    கொள்ளை

    இந்த விசாரணையின்போது, கணேசன் பல தகவல்களை போலீசாரிடம் வாக்குமூலமாக தந்து வருகிறான். அப்போது, "பஞ்சாப் நேஷனல் வங்கியின் பின்பக்க சுவரில் ஓட்டை போட எங்களுக்கு 2 நாள் ஆயிடுச்சு. ஏற்கனவே ஒரு பேங்கில கொள்ளை அடிச்சப்போ, அந்த சுவத்துல கேஸ் வெல்டிங் மூலம்தான் ஓட்டை போட்டு நகைகளை அள்ளினோம். ஆனா 9 மாசம் ஆகியும் எங்களை போலீஸ் பிடிக்கவே இல்லை.

    ஓட்டை போட்டோம்

    ஓட்டை போட்டோம்

    இதுக்கு அப்பறம்தான் லலிதா ஜுவல்லரிக்கு குறி வைத்தோம். கொள்ளையடிக்க தேவையான வெல்டிங் பொருள்களை மதுரையிலிருந்துதான் வாங்கி வந்தோம். லீவு நாள் எப்போ வரும்னு காத்துக்கிட்டு இருந்தோம்.இந்த லலிதா ஜுவல்லரி சுவற்றில் நானும் முருகனும் ஓட்டை போட்டோம்.. உள்ளே போனோம்.. நகைகளை எடுத்தோம்.. 4 பேரும் கொள்ளிட ஆத்தங்கரையில் பங்கு போட்டு கொண்டோம்.. அங்கே என்னை இறக்கிவிட்டனர்.

    நண்பன்

    நண்பன்

    எனக்கு தந்த 6 கிலோ நகைகளை என் வீட்டின் பக்கம் பதுக்கி வெச்சிருக்கேன். சேலம் ஜெயிலில் எனக்கு முருகன் பழக்கம். எத்தனையோ முறை, பல கேஸ்களில் முருகனை நான் வெளியே கொண்டு வந்திருக்கேன். முருகன் என்னை முழுசா நம்பியதால, கூடவே வைத்து கொண்டான்.

    காட்டி தந்துட்டாரு

    காட்டி தந்துட்டாரு

    படம் எடுத்து நஷ்டம் ஆயிட்டாரு.. உடம்பும் கெட்டுப் போச்சு.. திருவாரூருக்கு சோர்ந்து போய், நொந்து போய் வந்தார். அப்பதான், திருச்சி சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கியைக் குறி வெச்சோம். இந்த லலிதா ஜூவல்லரி கொள்ளையில், முருகன் என்னைக் காட்டி தர மாட்டான்னு ரொம்ப நம்பினேன். ஆனா, என்னை இப்படி கோர்த்துவிட்டுட்டார்" என்று புலம்பி தள்ளி உள்ளாராம்!

    English summary
    lalitha jewellery case issue: ganesan confessed to trichy police and police seized six kg gold from him
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X