திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டேக்கா கொடுத்து எஸ்கேப் ஆன.. திருவாரூர் திருடன் முருகன்.. பெங்களூர் கோர்ட்டில் சரண்!

லலிதா ஜுவல்லரியில் கொள்ளையின் முக்கிய நபர் முருகன் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Lalitha Jewellery Theft | லலிதா ஜுவல்லரி வழக்கில் முக்கிய திருடன் முருகன் பெங்களூர் கோர்ட்டில் சரண்!

    திருச்சி: லலிதா ஜூவல்லரி கொள்ளையில் மாஸ்டர் பிளான் போட்டு, இந்த கொள்ளைக்கே மூல காரணமாக இருந்த கேங் லீடர் முருகன் பெங்களூர் கோர்ட்டில் இன்று சரணடைந்துள்ளான்.

    லலிதா ஜூவல்லரி கொள்ளையில் மிகப்பெரிய நெட் ஒர்க் இருக்கும் என்று ஆரம்பத்தில் இருந்தே நம் போலீசார் சந்தேகித்து வந்தனர். அதன்படியே இந்த கொள்ளையை நடத்தியது நாடு முழுக்க கைவரிசையை காட்டிய முருகன் என்பவனாகத்தான் இருக்கும் என போலீசார் சந்தேகித்தனர்.

    கடந்த வாரம் பைக்கில் சிக்கிய மணிகண்டன், மற்றும் சுரேஷ்.. இவர்களை போலீசார் கைது செய்து உள்ளே தூக்கி வைத்துள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில்தான், லலிதா ஜூவல்லரி கொள்ளையில் முருகனுக்கு தொடர்பு உள்ளது என்று போலீசார் முடிவு செய்தனர்.

    ஏடிஎம் கொள்ளையன்

    ஏடிஎம் கொள்ளையன்

    முருகன் லேசுபட்ட ஆள் இல்லை. தாஹி அலி தலைமையில் டெல்லியில் பல குற்ற செயல்களிலும் முருகன் ஈடுபட்டவன், பெங்களூரில் கொள்ளை, ஹைதராபாத்தில் கொள்ளை என ஒவ்வொரு மாநிலத்திலும் கை வரிசையை காட்டியவன்.

    கூட்டாளி

    கூட்டாளி

    மக்களின் கவனத்தை திசை திருப்பி நகை, பணம் பறிப்பவதில் முருகன் ஸ்பெஷலிஸ்ட் என்கிறார்கள். 200 கைது வாரண்ட்கள் வரை நிலுவையில் உள்ளதாம். நெல்லையில் தினகரன் என்ற ஒரு கூட்டாளி உள்ளானாம். இவனுடன் மட்டும் சேர்ந்து முருகன் 800 கொள்ளைகளை நடத்தி உள்ளான்.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    2008-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் கைவரிசையை காட்டிய இந்த திருவாரூர் திருடன் முருகன் சிக்கினால், பல திடுக் தகவல்கள் வெளியாகும் என்பதால், முருகனை பிடிக்க போலீசார் ஆரம்பம் முதலே தயாரானார்கள். முருகன் எப்போதுமே வேனிலேயே சுற்றி திரிபவர் என்ற கூடுதல் தகவலும் கிடைத்துள்ளதால், அதற்கான வேலைகளில் போலீசார் ஈடுபட்டனர்.

    கைது

    கைது

    கொள்ளையடிக்க திருச்சியில் ஒரு வீட்டையே வாடகைக்கு பிடித்து, 2 மாசம் ஸ்கெட்ச் போட்டுள்ள தகவலும் வெளியானது. இதனால் போலீசாரின் முழு கவனமும் முருகனை பிடிப்பதிலேயே இருந்தது. கொள்ளையடித்த 8 கிலோ நகையுடன் தப்பிய முருகனுக்கு மிகப்பெரிய தேடுதல் வலை வீசப்பட்டது. இப்போது பெங்களூர் கோர்ட்டில் முருகன் சரணடைந்துள்ளான். இதையடுத்து, போலீசாரின் விசாரணை முருகனிடம் தீவிரமடையும் என தெரிகிறது.

    தவிர்ப்பு

    தவிர்ப்பு

    பெங்களூரு பானஸ்வாடி பகுதியில், நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கு முருகன் மீது நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில்தான் முருகன் சரணடைந்துள்ளான். தமிழக போலீஸாரிடம் நேரடியாக சிக்குவதைத் தவிர்க்கவே பெங்களூர் கோர்ட்டில் அவன் சரணடைந்திருப்பதாக தெரிகிறது.

    விசாரணை

    விசாரணை

    லலிதா ஜுவல்லரி சுவரில் ஓட்டை போட்டது முதல், இந்த கொள்ளைக்கு உதவியர்கள் யார்யார், இந்த கொள்ளை தவிர பிற கொள்ளைகளில் தொடர்பு இருக்கிறதா என்று போலீசாரின் விசாரணை ஆரம்பமாகும் என்று தெரிகிறது. இதன்மூலம் பல ரகசிய பகீர்களும் முருகனிடம் இருந்து வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Main culprit arrested in Trichy Lalitha Jewellery Theft issue and Police investigation is going on
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X