திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிடப்பில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம்.. மணப்பாறையில் தண்ணீர் பஞ்சம்.. உபரிநீரை பயன்படுத்தும் நிலை

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதால் அப்பகுதி மக்கள் உபரிநீரை குடிநீராக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வழக்கமான கோடை காலத்தை விட இந்த ஆண்டு கூடுதல் வெப்பமும் கடும் வறட்சியும் நிலவி வருகிறது. இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் சிறிய பள்ளங்களை தோண்டி அதில் வரும் ஊற்று நீரை கொட்டாங்குச்சிகளில் பிடித்து குடங்களில் நிரப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

தண்ணீருக்காக மக்கள் தங்கள் வேலை வெட்டிகளை விட்டுவிட்டு மணிக்கணக்கில் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். அவ்வாறு கிடைக்கும் தண்ணீரும் இரு நாட்கள் அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறையே கிடைப்பதாக கூறுகின்றனர்.

"ஒருபிடி மண்ணை கூட தர முடியாது".. 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் கருப்பு கொடியுடன் போராட்டம்

காவிரி கூட்டு குடிநீர் திட்டம்

காவிரி கூட்டு குடிநீர் திட்டம்

இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் குளித்தலை காவிரி ஆற்று படுகையிலிருந்து திருச்சி மாவட்டம் மணப்பாறை, மருங்காபுரி உள்பட 500-க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட்ம செயல்படுத்தப்படுகிறது.

குளித்தலை

குளித்தலை

எனினும் அதை முறையாக செயல்படுத்தாத காரணத்தால் இது போன்ற தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்காது என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது போன்ற தண்ணீர் பஞ்சத்தினால் குளித்தலை சட்டசபை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் இருந்து பெண் எடுக்கவே தயக்கம் காட்டுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

தண்ணீர்

தண்ணீர்

கடந்த 1980-ஆம் ஆண்டு முதல் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கோடை காலங்களில் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டு ராட்சத கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தண்ணீர்

தண்ணீர்

தினமும் அரை மணி நேரம் கூட தண்ணீர் வருவதில்லை. மணப்பாறை வழியாக மருங்காபுரி வரை செல்லும் காவிரி குடிநீர் குழாய்களில் கலிங்கப்பட்டி, வெடத்திலாம்பட்டி, தீராம்பட்டி, காவல்காரன்பட்டி, வளநாடு போன்ற ஆங்காங்கே ஒருசில இடங்களில் ஏற்படும் ஏர்வால்வுகளில் வெளியேறும் தண்ணீர்தான் தற்போது கைகொடுப்பதாக கூறுகின்றனர்.

கழிவுநீருடன் தண்ணீர்

கழிவுநீருடன் தண்ணீர்

பொத்தமேட்டுப்பட்டி அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் சிறியகுட்டைபோல் தேங்கி கிடக்கும் நீரில் கழிவுநீரும் கலக்கிறது. இருந்தாலும் வேறுவழியின்றி அத்தண்ணீரையும் தனது பயன்பாட்டு பிடித்து செல்லும் அவலமும் ஏற்பட்டு வருகிறது. இத்தண்ணீரை பிடிக்க தள்ளுவண்டி, சைக்கிள், மோட்டார் சைக்கிள்களில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தும் வந்து பிடித்து வருகின்றனர்.

English summary
Heavy water Crisis in Manaparai. People are affected severly and has to go for taking water from 20 km away from their place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X