திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நான் இந்தி படங்களில் நடித்திருக்கிறேன்.. இந்தி மொழியை திணிக்கக்கூடாது.. சொல்கிறார் கமல்ஹாசன்!

Google Oneindia Tamil News

திருச்சி: இந்தி மொழியை திணிக்க கூடாது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் இந்தி மொழியை கற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் இந்தி திணிப்பு குறித்தும் இந்தி எதிர்ப்பு குறித்தும் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

வரும் கல்வியாண்டு முதல் இந்தி பேசாத மாநிலங்களில் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்ற கஸ்தூரி ரங்கன் குழுவின் பரிந்துரையை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

அதிமுகவால்தான் தமிழகத்தில் பாஜக அணி தோற்றது.. புயலை கிளப்பும் ஆடிட்டர் குருமூர்த்தி டுவீட் அதிமுகவால்தான் தமிழகத்தில் பாஜக அணி தோற்றது.. புயலை கிளப்பும் ஆடிட்டர் குருமூர்த்தி டுவீட்

போராட்டம் வெடிக்கும்

போராட்டம் வெடிக்கும்

தமிழகத்தில் அதற்கு எதிராக திமுக, மதிமுக உள்ளிட்டக் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்தி திணிப்பை மேற்கொண்டால் பெரும் போராட்டம் வெடிக்கும் என அக்கட்சிகள் எச்சரித்து வருகின்றனர்.

இந்தி படத்தில் நடித்திருக்கிறேன்

இந்தி படத்தில் நடித்திருக்கிறேன்

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தி திணிப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில், நான் இந்தி படத்தில் நடித்தவன், எந்த மொழியையும் திணிக்க கூடாது.

இனி கற்பது கடினம்

இனி கற்பது கடினம்

விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியையும் விருப்பத்துடன் கற்றுக்கொள்வார்கள். தமிழர்கள் தங்களது மொழியை விட்டுவிட்டு இன்னொரு மொழியை இனி கற்றுக்கொள்வது கடினம், தேர்தலில் பிழைகள் நேர்ந்திருக்கலாம். அதை கண்டுபிடிக்க வேண்டியது ஜனநாயக கடமை.

சந்தேகம் மட்டும் போதும்

சந்தேகம் மட்டும் போதும்

தமிழகம் புறக்கணிக்கப்படுவது என்பது அச்சமாக இருக்க வேண்டியது இல்லை. சந்தேகமாக இருந்தால் மட்டும் போதும், மோடியின் அடுத்த 5 ஆண்டுகால ஆட்சி நன்றாக இருக்கவேண்டும் என்பது இந்தியனாக எனது ஆசை. இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

கரூர் செல்லும் முன்பு

கரூர் செல்லும் முன்பு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பள்ளப்பட்டியில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று பேசிய கமலஹாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கரூர் கோர்ட்டில் ஆஜராக இன்று காலை விமானம் மூலம் திருச்சி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Kamal Haasan has said that Hindi language should not be imposed. People can learn if they will He said further.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X