திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

30 அடி ஆழத்திலிருந்து 100 அடி ஆழத்திற்கு சுஜித் சென்றது எப்படி?

Google Oneindia Tamil News

Recommended Video

    மேலும் ஆழத்தில் சென்றுவிட்ட சிறுவன் சுர்ஜித்... மீட்பு பணி தீவிரம்

    திருச்சி: 30 அடி ஆழத்தில் விழுந்த 2 வயது சிறுவன் சுஜித் எப்படி 100 அடி ஆழத்துக்கு கீழே சென்றார், என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி, கிராமத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்தை காப்பாற்றும் பணிகள் 24 மணி நேரத்தை கடந்து நடந்து கொண்டிருக்கின்றன.

    How 2 year old child Sujith, fell down to 80 feet from 30 feet bore well?

    நேற்று மாலை 5.40 மணியளவில் அந்த சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த உடனே, மீட்பு பணிகள் உடனடியாக துவங்கப்பட்டன.

    முதலில் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு பக்கவாட்டில் பள்ளம் தோண்டி அதன் வழியே சென்று குழந்தையை மீட்பதாகத்தான் இருந்தது. ஆனால் அந்த அதிர்வு காரணமாக குழந்தை மேலும் கீழே சென்று விடக்கூடும் என்ற அச்சத்தால், அந்த பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.

    இதையடுத்து மணிகண்டன், ஸ்ரீதர், டேனியல் போன்ற தனிநபர் நிபுணர்களின் உதவியைக் கொண்டு கயிறு மூலம் குழந்தையை மீட்டெடுக்க முயற்சி நடைபெற்றது. மிகவும் நுணுக்கமாக அந்த பணிகளை மேற்கொண்ட போதிலும் மூன்று முறை கைகளில் இருந்து கயிறு நழுவிவிட்டது.

    இதையடுத்து அதிகாலை, 1.30 மணியளவில் மீண்டும் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு ஆள்துளை கிணறு இருந்த பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டது. அங்குதான், பிரச்சினையே ஆரம்பித்துள்ளது. இந்த பள்ளம் தோண்டும் பணிகளில் ஏற்பட்ட அதிர்வு காரணமாக ஆள்துளை கிணறு மணல் சரிந்து சுஜித் மேலும் கீழே நழுவ தொடங்கிவிட்டார்.

    படிப்படியாக அதிகாலை 3.30 மணி அளவில், சுஜித் 70 அடி ஆழத்திற்கு சென்று விட்டார். அதுவரை குழந்தையின் அழுகுரலாவது கேட்டு கொண்டு இருந்தது. ஆழம் அதிகரித்ததால் சுற்றுப்புறத்திலுள்ள ஈரமான மணல் மேலும் ஈரமாக மாறியிருக்கும். குழந்தையும் நீண்ட நேரமாக உள்ளே இருப்பதால் சோர்வடைந்து விட்டது.

    சாப்பிடவும், குடிக்கவும் உணவு தண்ணீர் போன்ற எதுவும் இல்லாமல் அந்த குழந்தை சோர்வடைந்து இருக்கும் காரணத்தாலும், மற்றும் ஆழம் அதிகரித்துள்ளதன் காரணத்தால் அது அழும் குரல் கூட வெளியே கேட்கவில்லை. இதுகுறித்து நிகழ்விடத்தில், இருக்கக்கூடிய அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தியாளர்களிடம் கூறுகையில், நிபுணத்துவம் பெற்றவர்கள் கொண்டுதான் கயிறு மூலமாக குழந்தையை மீட்டு எடுக்கும் முயற்சியை நடத்தினோம். ஆனால் மூன்று முறை கயிறு குழந்தையின் கைகளில் இருந்து நழுவி விட்டது தான் பிரச்சினைக்கு காரணம் ஆகிவிட்டது.

    தற்போது நெய்வேலி சுரங்க நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோரின் உதவியுடன் அருகே ஒரு சுரங்கம் அமைத்து அதனுள்ளே, ஆக்சிஜன் சிலிண்டர், லைட் போன்ற உபகரணங்களுடன் வீரர்களை நேரடியாகவே உள்ளே அனுப்பி குழந்தையை மீட்கும் முயற்சிகளை ஆரம்பித்து விடும் என்று தெரிவித்தார், விஜயபாஸ்கர்.

    இதனிடையே இரவு கிடைத்த தகவல்படி, சுஜித் தற்போது 100 அடிக்கும் கீழே சென்றுள்ளார். எனவே, பள்ளம் தோண்டும் பணியும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுவன் மெல்லிய உடல் கொண்டவராக உள்ளார். மேலும் உணவு சாப்பிடவில்லை என்பதால், வயிற்று பகுதி சிறிதாகி, சுஜித் மேலும் கீழே இறங்குவதுதான் சிக்கலுக்குகாரணம். மொத்தம் 600 அடி ஆழம் கொண்ட இந்த ஆழ்துளை கிணற்றை, பயன்படுத்தாமல் சும்மாவே விட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    How 2 year old child Sujith, fell down to 80 feet from 30 feet bore well, here is the reason.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X