பளபளக்கும் தங்கம்.. "அதுக்குள்ளே" போய் வச்சு கடத்திருக்கீங்களே குருவிகளா.. ரவுண்டு கட்டிய ஆபீசர்ஸ்
திருச்சி: ஷார்ஜாவில் இருந்து திருச்சி வந்த 3 பயணிகளை ஏர்போர்ட் அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்,
தமிழகம் முழுவதும் ஏர்போர்ட்களில் தங்கம் கடத்தல் நடக்காத வண்ணம் அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து அவற்றை தடுத்து வருகிறார்கள்.
அதில் பிடிபடுபவர்களையும் பிடித்து கைது செய்து உள்ளே வைக்கிறார்கள். அப்படியும் ஒருசிலர் டிமிக்கி கொடுத்து தங்கத்தை கடத்தவும் செய்கிறார்கள்..
இந்தியாவிலேயே ஒரே ஏர்போர்ட்! நேரம் தவறாமையில் சென்னைதான் பெஸ்ட்! உலக அளவில் என்ன ரேங்க் தெரியுமா?

எலக்ட்ரானிக்
இது நிறைய திருச்சி ஏர்போர்ட்டில் நடந்து வருகிறது.. அதனால்தான் கூடுதல் விழிப்புணர்வுடன் அதிகாரிகள் அங்கு கண்காணித்து வருகிறார்கள். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை பல்வேறு வடிவில் மறைத்து கடத்தி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது.

கொண்டைகள்
அதிலும் டிசைன் டிசைனாக நூதன வழிகளில் தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாகி விட்டது. கடந்த வாரம்கூட உள்ளாடையில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்துள்ளனர்.. மேலும் சிலர் தலையில் ஒரு பெரிய கொண்டையை போட்டு, அந்த கொண்டைக்குள் தங்கத்தை கடத்தி வந்தனர்.. சில தினங்களுக்கு முன்பு, அப்படியே அயன் பட பாணியில், கேப்சூல்களில் தங்க துகள்கள் நிரப்பப்பட்டு, அவைகளை வயிற்றில் விழுங்கி, ஃபிளைட் ஏறி வந்துள்ளனர்.. அதே அயன்பட பாணி போலவே இவர்களையும் வளைத்து பிடித்தனர் ஏர்போர்ட் அதிகாரிகள்.

லேப்டாப்கள்
இதில், தற்போதைய வேலைக்கு செல்லும் நபர்களின் அத்தியாவசிய தேவையாக இருப்பது லேப்டாப்புகள்.. மேலும் வெளிநாடுகளில் இருந்து தொழில்ரீதியாக பயணித்து வருபவர்கள் நிச்சயம் லேப்டாப்களையும் கையோடு கொண்டு வருவது வழக்கம்.. இந்த லேப்டாப்களிலும் தங்கம் கடத்தி கொண்டு வருகிறார்கள்.. ஆனாலும் அதிகாரிகளிடம் இருந்து தப்ப முடிவதில்லை.

ஏர்போர்ட்
இந்நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் இதே திருச்சி ஏர்போர்ட்டில் நடந்துள்ளது.. நேற்று முன்தினம் துபாய்/சார்ஜாவிலிருந்து 3 பயணிகள் ஏர்போர்ட் வந்து இறங்கி உள்ளனர்.. அவர்களை வழக்கம்போல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.. எதிர்பார்த்தபடியே, அவர்கள் வைத்திருந்த லேப்டாப்கள் மீது சந்தேகம் வலுத்தது.. அந்த லேப்டாப்களை வாங்கி சோதனை செய்தனர்..
|
லேப்டாப்
லேப்டாப் உள்ளே மஞ்சள் கலரில் பேஸ்ட் போல தங்கத்தை ஒட்டி கொண்டு வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஃபாயில் வடிவில் மறைத்து வைத்திருந்தனர்.. அதன் மதிப்பு மொத்தம் ரூ.1.28 கோடி இருக்குமாம்.. அதாவது 1982 கிராம் தங்கத்தை கடத்தி வந்துள்ளனர்.. இதையடுத்து எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அந்த 3 விசாரணையின் பிடியில் உள்ளனர்..!