திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புனித ரமலான் மாதம்... வானில் பிறை தெரிந்தால் தகவல் கூறலாம்... அரசு காஜி அறிவிப்பு

Google Oneindia Tamil News

திருச்சி: புனித ரமலான் மாதம் தொடங்க உள்ள நிலையில் வானில் பிறை தெரிந்தால் அதனை தகவல் தெரிவிப்பதற்காக அலைபேசி எண்களை வெளியிட்டுள்ளார் திருச்சி மாவட்ட அரசு தலைமை காஜி.

திருச்சி மாவட்டத்தில் ரமலான் பிறை தொடர்பாஜ யாரும் தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவிக்க வேண்டாம் எனவும் அரசு காஜி ஜலீல் சுல்தான் கோரியுள்ளார்.

if you see cresent, inform this to govt kaji

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஏப்ரல் 24 -ம் தேதி ஷாபான் பிறை 29 மாலை மஃரிப் தொழுகையுடன் ரமலான் நோன்பு ஆரம்பமாகிறது. தற்போது கொரோனா நோய் தொற்று தொடா்பாக கால சூழ்நிலை சரியில்லாத காரணத்தால், இதுகுறித்து அறிவிப்பது மாவட்ட அரசு டவுன் காஜியின் பொறுப்பாகும்.

எனவே ஜமாத்தாா்கள், மாநகர, மாவட்ட உலமா பெருமக்கள், பொறுப்பாளா்கள் உள்ளிட்ட திருச்சி மாவட்டத்திலுள்ள இஸ்லாமியா்கள் அனைவரும் தாங்கள் இருக்கும் பகுதியில் பிறை செய்தி அறிந்து, தங்கள் பள்ளிவாசல் இமாம் மற்றும் நிா்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முறையான தகவல்களை 98424 77862, 81110 77862, 97887 85786 என்ற செல்லிடப்பேசி எண்களில் தெரிவிக்க வேண்டும்.

ஏதாவது ஊரில் பிறை தென்பட்டால் முறைப்படி தகவல் தரவேண்டும். அரசு தலைமை காஜி அறிவிக்கும் வரை யாரும் தன்னிச்சையாக அறிவிக்க கூடாது.தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட மாவட்ட அரசு டவுன் காஜிகள் மூலம், ரமலான் நோன்பு கடைப்பிடிப்பது குறித்து அறிவிப்பு செய்யப்படும்.

இவ்வாறு அவர் தனது அறிக்கைையில் தெரிவித்துள்ளார்.

English summary
if you see cresent, inform this to govt kaji
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X