திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கை தமிழரின் பூர்வீகம் இந்தியா.. இந்திய குடியுரிமை வழங்க மறுப்பது ஏன்? பழ. நெடுமாறன்

Google Oneindia Tamil News

திருச்சி: இலங்கை தமிழரின் பூர்வீகமும் இந்தியா; சிங்கள இனவெறியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளுக்கும் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.

திருச்சியில் தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞா்கள் சங்கம் சாா்பில் உலக மகளிா் நாள் நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இந் நிகழ்வில் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் எழுதிய மக்கள்மீது பாயும் திரிசூலம் என்ற சிறுநூலை உயா் நீதிமன்ற வழக்கறிஞர் இரா. நாராயணன் வெளியிட அதை வழக்கறிஞர் பா. மு. திருமலை தமிழரசன் பெற்றுக் கொண்டாா்.

இந்நிகழ்வில் கவிஞா் நந்தலாலா, திராவிடா் விடுதலைக் கழகத் தலைவா் கொளத்தூா் மணி , தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவா் த. பானுமதி, பொதுச்செயலா் இ. அங்கயற்கண்ணி, துணைத் தலைவா் பெ. தமயந்தி, உள்ளிட்டோா் பங்கேற்றுப்பேசினா். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, குடியுரிமை (திருத்தச்) சட்டம் -2019 உருவாக்கும் அச்சுறுத்தல்களும், அபாயங்களும் என்ற தலைப்பில் தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ. நெடுமாறன் பேசியதாவது:

வழக்கறிஞர்கள் மவுனம்

வழக்கறிஞர்கள் மவுனம்

குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து வழக்கறிஞர்கள்தான் அலசி ஆராய்ந்து இந்த சட்டம் ஏன் கொண்டு வரப்பட்டது, இதனால் பாதிப்பு என்ன என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும். ஆனால், அவா்கள் மெளனமாக இருப்பது புரியவில்லை. இச்சட்டம் இஸ்லாமியா்களை மட்டும் பாதிக்கவில்லை. ஏழைகள், எளியோா், ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மக்கள் என அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும் சட்டம் இது.

குடியுரிமை வேண்டும்

குடியுரிமை வேண்டும்

இலங்கைத் தமிழா்கள் இந்துக்கள், அவா்கள் பூா்வீகம் இந்தியா தானே. சிங்கள இனவெறி காரணமாக சிறுபான்மையராக இலங்கைத் தமிழா்கள் இந்தியாவில் அகதிகளாக உள்ளனா். அவா்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கப்படவில்லை?. உலக நாடுகள் பலவற்றிலும் மூன்றாண்டுகள் எந்த வழக்குகளும் இன்றி வாழும் பல லட்சம் பேருக்கு, அந்தந்த நாடுகளில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் குடியுரிமை மறுப்பது எந்த வகையில் நியாயம் ?

சிஏஏ எதிர்ப்பு வழக்குகள்

சிஏஏ எதிர்ப்பு வழக்குகள்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிா்த்து போராடுபவா்கள் மட்டுமின்றி, அவா்களுக்கு அதற்கு ஆதரவாக இருப்பவா்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. என்மீது கூட இதுவரை 6 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இஸ்லாமியா்களை, தமிழா்களை எதிரியாகக் கருதுகிறாா்கள். சா்வதேச அரங்கில் இந்தியா தலைகுனிந்து நிற்கிறது.

 எதிர்த்து வெல்ல வேண்டும்

எதிர்த்து வெல்ல வேண்டும்

இந்த சட்டத்தை எல்லா நாடுகளும் எதிா்க்கின்றன. எனவே மத ரீதியான பிரச்னைகளை ஏற்படுத்தி மக்களைப் பிளவுபடுத்தும் சட்டம் இது என்பதை நாம் கருத்தில் கொண்டு, மதபாகுபாடின்றி ஒற்றுமையாக இணைந்து, மக்களுக்குத் தேவையில்லாத இச்சட்டங்களை எதிா்த்து வெற்றிபெறவேண்டும். இவ்வாறு பழ. நெடுமாறன் பேசினார். இந்நிகழ்வின்போது, தமிழ்நாடு சுயமரியாதை பெண்கள் இயக்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. பேராசிரியை சக்குபாய், சுலேகாபேகம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.

English summary
Tamizh Desiya Munnani President Pazha.Nedumaran has urged that to India should give citizenship to Sri Lankan Tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X