திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வளைகுடா வாழ் இந்தியர்களே.. திருச்சிக்கு திரும்ப விமானங்கள்.. இண்டிகோ முக்கிய அறிவிப்பு

Google Oneindia Tamil News

திருச்சி: சார்ஜா- திருச்சி இடையே அக்டோபா் 1 முதல் 22 -ஆம் தேதி வரை 7 மீட்பு விமானங்கள் இயக்கப்படும் என இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா பொதுமுடக்கத்தில், விமான சேவைகளும் இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியா்கள் தாயகம் திரும்பும் வகையில், வந்தே பாரத் திட்டம் மூலம் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது தனியார் விமான நிறுவனங்களும் இந்த சேவையைத் தொடங்கியுள்ளன.

 Indigo Airlines will operate seven flights between Sharjah and Trichy from October 1 to 22

அக்டோபா் 1, 4, 8, 11, 15, 18, 22 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1 மணிக்கு, சார்ஜாவிலிருந்து புறப்படும் இண்டிகோ விமானம், திருச்சி விமான நிலையத்தை இரவு 8 மணிக்கு வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,.

கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் நவம்பர் 1 முதல் தொடங்கும்.. மத்திய அரசு முக்கிய அட்டவணை கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் நவம்பர் 1 முதல் தொடங்கும்.. மத்திய அரசு முக்கிய அட்டவணை

இதற்கிடையே முதற்கட்டமாக ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஈராக், மாலத்தீவுகள், நைஜீரியா, ஜப்பான், கத்தார், அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 13 நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து சர்வதேச விமான சேவை துவங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. .ஏனெனில் கொரோனா காரணமாக இதுவரை சர்வதேச விமான சேவை தொடங்கப்படவில்லை.

English summary
Indigo Airlines has announced that it will operate seven rescue flights between Sharjah and Trichy from October 1 to 22.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X