திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அறிமுகம்... இனி கைரேகை வைத்தால் மட்டுமே அரிசி, சர்க்கரை!

Google Oneindia Tamil News

திருச்சி: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், இனி நேரில் சென்று கைரேகை வைத்தால் மட்டுமே அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் உங்கள் வீட்டுக்கு கிடைக்கும். முதல்கட்டமாக இந்த நடைமுறை திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முறைகேடுகளை தடுக்க ஸ்மார்ட் கார்டு மூலம் மட்டுமே பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இதன்படி ரேஷன் பொருள் வாங்க கடைக்கு சென்றால், ஸ்மார்ட் கார்டில் உள்ள பார்கோர்டை, கடை ஊழியரிடம் உள்ள பாயிண்ட் ஆப் சேல் மிஷனில் ஸ்கேன் செய்வார்.

அதன்பின்னர் அவர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படும். பொருட்கள் வாங்கியவுடன், நுகர்வோர் ஏற்கனவே அளித்துள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வந்துவிடும். இதுவே இப்போது உள்ள நடைமுறை.

என்ன நடக்கிறது ராஜஸ்தானில்.. கட்சித் தாவல் தடைச் சட்டம் சொல்வது என்ன? யாருக்கு சாதகம்?- விளக்கம்என்ன நடக்கிறது ராஜஸ்தானில்.. கட்சித் தாவல் தடைச் சட்டம் சொல்வது என்ன? யாருக்கு சாதகம்?- விளக்கம்

முறைகேடு புகார்

முறைகேடு புகார்

இந்த நடைமுறைப்படி குடும்பத்தினருக்கு தெரியாமல் அவர்களின் பொருட்களை ரேஷன் கடைகளில் முறைகேடு நடைபெற வாய்ப்பு இல்லை. எனினும் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர் மற்றும் குடும்ப உறுப்பினர் உள்பட யார் வந்து கார்டை காட்டினாலும் ரேஷன் கடை ஊழியர்கள் பொருட்களை வழங்கி வருகிறார்கள். . இதுபோன்ற நடைமுறைகளால் சில முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது.

மூன்று மாவட்டங்களில்

மூன்று மாவட்டங்களில்

இதனால், பயோமெட்ரிக் முறையை ரேஷன் கடைகளில் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பயோமெட்ரிக் முறை நேற்று முதல் (27ம் தேதி) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள அனைத்து ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புதிய இயந்திரம்

புதிய இயந்திரம்

அதில் "27ம் தேதி (நேற்று) முதல் பயோமெட்ரிக் (கைரேகை) விற்பனை முனைய இயந்திரம் அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் மாற்றப்பட உள்ளது. திருச்சி கிழக்கு பகுதியில் 121 கடைகள், திருச்சி மேற்கு பகுதியில் 92 கடைகள், மண்ணச்சநல்லூர் பகுதியில் 94 கடைகளில் பயோமெட்ரிக் கருவி மாற்றப்பட உள்ளது. இதனால் பழைய இயந்திரம் மூலம் பொருட்கள் வழங்க முடியாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷனில் பொருள்

ரேஷனில் பொருள்

திருச்சி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து மற்ற மாவட்டங்களுக்கு படிப்படியாக பயோமெட்ரிக் மிஷன் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்மூலம் யார் வேண்டுமானாலும் இனி ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க முடியாது. குடும்ப அட்டையில் (ஸ்மார்ட் கார்டு) உள்ளவர்கள் மட்டுமே ரேஷன் கடைக்கு வந்து கைரேகை வைத்து பொருட்களை வாங்க முடியும். உண்மையான பயனாளர்களுக்கு இனி பொருட்கள் கிடைக்கும். ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வராதவர்களுக்கு இனி ரேஷன் பொருட்கள் கிடைக்காது என்கிறார்கள். எனினும் இந்த நடைமுறை அமலுக்கு வந்தால் வேலைக்கு செல்வோர் அரிசி வாங்க ஒரு நாள் விடுமுறைதான் எடுக்கும் நிலை ஏற்படும் என்ற புகாரும் உள்ளது. வயதானவர்கள், நேரில் சென்று வாங்க முடியாதவர்கள், அருகில் உள்ளவர்களிடம் கொடுத்து வாங்குவார்கள். புதிய நடைமுறை அமலுக்கு வந்தால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்ற புகாரும் உள்ளது.

English summary
introduction of biometric system in rations. Products including rice and sugar only if fingerprinted now. Co-operative officials informed
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X