திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருச்சி ஜமால் முகமது கல்லூரி நிறுவனர் நாள் விழா.. கோலாகல கொண்டாட்டம்

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சியின் புகழ் பெற்ற ஜமால் முகமது கல்லூரியில் கல்லூரி நிறுவனர் தின விழா சிறப்பாக நடைபெற்றது.

1951இல் தொடங்கி 70 ஆண்டுகள் பூர்த்தியாகும் ஜமால் முகமது கல்லூரி நிறுவனர்கள் என்.எம் காஜா மியான் ராவுத்தர் எம் ஜே ஜமால் முகமது ராவுத்தர் நினைவு போற்றும் விழாவும் அறிஞர்கள் சபை நூற்றாண்டு விழாவும் ( மஜ்லிஸ் உலாமா) , மற்றும் நூல் வெளியீட்டு விழாவும் மிக சிறப்பாக நடைபெற்றது.

jamal mohamed college celebrates its founders day

கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் முனைவர் ஹாஜா நஜ்முதீன் பொருளாளர் எம்.ஜே.ஜமால் முகம்மது மற்றும் இயக்குனர்கள் முன்னிலை வகிக்க கல்லூரி முதல்வர் முனைவர் எஸ் இஸ்மாயில் முஹியத்தீன் தலைமை ஏற்றார்.

சாகித்திய அகதாமி விருதாளர் இரா நடராசன், பேராசிரியர் தி.மு. அப்துல் காதர் , தக்கலை ஹலீமா, கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி, பேராசிரியர் மானசீகன் , மூளை மற்றும் நரம்பியல் நிபுணர் டாக்டர் எம் ஏ அலீம் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்.

jamal mohamed college celebrates its founders day

இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழக முஸ்லிம்கள் பங்கு என்ற நூலை தமிழ் பண்பாட்டு ஆய்வு மைய இயக்குநர் முனைவர் ராஜா முகமது எழுதியதை,அழகப்பா பல்கலைக்கழகம் துணைவேந்தர் முனைவர் பேராசிரியர் என் ராஜேந்திரன் வெளியீட்டு கருத்துரை வழங்கினார்.

நிறைவு விழாவில் பொறியியல் வல்லுநர் அறிவியல் அறிஞர் எம் ஜே முஹம்மத் இக்பால் இலக்கிய பேராசான் முன்னாள் எம்எல்ஏ பழ கருப்பையா, பேராசிரியர் சுப வீரபாண்டியன் ஆகியோர் கல்லூரி நிறுவனர்கள் பற்றியும் ஜமால் முகமது கல்லூரி மனிதநேய மதநல்லிணக்க பல்கலைக்கழகமாக நல்லதொரு பெரும் குடும்பமாக விளங்குவது எடுத்துக்கூறி வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது அறிவே சிறப்பான ஆயுதம் அறிவைக் கொண்டு அன்பு அறம் வளர்த்து சீரும் சிறப்புமான சமூகத்தினை நிறுவனர்கள் விருப்பப்படி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூறினார் .

நிறுவனர் காஜா மியான் நினைவு தபால் தலை நினைவு தபால் தலையினை கல்லூரி செயலாளர் காஜா நஜிமுதீன் வெளியிட அறிவியல் அறிஞர் எம் ஜே இக்பால் பெற்றுக்கொண்டார் . நிறுவனர் ஜமால் முஹம்மத் நினைவு தபால் தலையினை எம் ஜே இக்பால் வெளியிட கல்லூரி பொருளாளர் எம் ஜே ஜமால் முஹம்மத் பெற்றுக்கொண்டார். விழாவுக்கான ஏற்பாடுகள் முனைவர் தமிழ் பேராசிரியர் சையது ஜாகீர் ஹஸன் முனைவர் முகமது இஸ்மாயில் சிராஜ் மற்றும் குழுவினர் செய்திருக்க அப்துல் கபூர் குளிர் ஆடிட்டோரியம் ஆயிரக்கணக்கான மக்களால் நிரம்பியிருந்தது.

English summary
The famous Jamal Mohamed college celebrated its founders day in Trichy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X