திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருச்சியில் மனைவி, 2 மகன்களை கொலை செய்துவிட்டு நகை கடைக்காரர் தற்கொலை முயற்சி.. சிக்கியது கடிதம்!

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சியில் உள்ள தங்கும் விடுதியில் மனைவி, 2 மகன்களை கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற நகைக்கடை அதிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள ஊரணிபுரம் வெட்டுவாக்கோட்டை கே.ஆா். அம்சவள்ளியம்மாள் காலனியைச் சோ்ந்த முருகேசன் மகன் செல்வராஜ் (45). ஊரணிபுரத்தில் நகைக்கடை நடத்தி வந்தாா்.

இவரது மனைவி செல்லம் (43), மகன்கள் நிகில் (20), முகில் (14). இவா்களில் நிகில் மூளை வளா்ச்சிக் குன்றியவா். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால், செல்வராஜ் மற்றும் குடும்பத்தினா் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளனா்.

 பிரக்யா தாக்கூருக்கு வந்த மர்ம கடிதம்.. மோடி, அமித்ஷா, தோவல் படங்களை குறி வைத்ததால் பரபரப்பு பிரக்யா தாக்கூருக்கு வந்த மர்ம கடிதம்.. மோடி, அமித்ஷா, தோவல் படங்களை குறி வைத்ததால் பரபரப்பு

விடுதி

விடுதி

இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் மாலை திருச்சிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் திருச்சி மேலரண் சாலையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார்கள். திருச்சியில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்ய வந்திருப்பதாக அவர்கள் விடுதி மேலாளரிடம் கூறி இருந்தனர்.

செல்வராஜ்

செல்வராஜ்

இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் ஊரணியில் உள்ள செல்வராஜின் உறவினர் குரு கணேஷ் என்பவருக்கு அவரது செல்போனில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் செல்வராஜ் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குறிப்பிட்டு இருந்தார்.

 அறைக்கு சென்றார்

அறைக்கு சென்றார்

இதனால் அதிர்ச்சி அடைந்த குரு கணேஷ் திருச்சியில் உள்ள குறிப்பிட்ட அந்த தங்கும் விடுதிக்கு இரவு 10.30 மணி அளவில் வந்தார். விடுதி ஊழியர்களின் உதவியுடன் செல்வராஜ் தங்கி இருந்த அறைக்கு சென்றார்.

 போராடி

போராடி

அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது செல்லம், நிகில், முகில் ஆகிய 3 பேரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தனர். செல்வராஜும் ரத்தக்காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

விசாரணை

விசாரணை

இதுபற்றி ஓட்டல் ஊழியர்கள் உடனடியாக கோட்டை போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டு செல்வராஜை ஆம்புலன்சில் ஏற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர் ஸ்ரீகாந்த், இன்ஸ்பெக்டர் சண்முகவேலு ஆகியோர் உடனடியாக அங்கு வந்து கொலை செய்யப்பட்ட 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 தற்கொலை கடிதம்

தற்கொலை கடிதம்

செல்வராஜ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய கடிதம் போலீஸாருக்கு கிடைத்துள்ளது. அதில் தன்னுடைய மகன் நிகில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டதால், விரக்தியில் இந்த முடிவை எடுத்ததாக செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்.

English summary
A Jewel shop owner kills his wife and two sons and commits suicide attempt. Police found suicidal note citing his son's health condition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X