• search
திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஒரே நாளில் 10 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்தவர் எம்.ஜி.ஆர்.. அந்து துணிச்சல் உண்டா.. கமல் கேள்வி

|

திருச்சி: ஒரே நாளில் 10 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்தவர் எம்.ஜி.ஆர். ஊழலில் சாதனை படைத்தவர்களை நீக்க துணிச்சல் உண்டா? என்று மக்கள் நீதி மய்யம் கட்சியித் தலைவர் கமல்ஹான் கேள்வி எழுப்பி உள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் சட்டசபை தேர்தலுக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று திருச்சியில் நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், "முழு நேரம் யாரும் எதையும் கிழிப்பதில்லை என்ற பெரியாரின் வாக்கினை போல் நானும் அப்படி நடக்கிறேன். எம்ஜிஆர் வைத்த இலை இப்படி துளிர்க்கும் என அவர் நினைத்திருக்க மாட்டார்.

திருச்சிக்கு மகளுடன் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் வந்த கமல் .. உற்சாக வரவேற்பு

பணக்கார்கள்

பணக்கார்கள்

என் தந்தையிடம் கற்ற மரியாதை காரணமாக தான் இன்றைய கொள்ளையர்களை கூட நான் திட்டியதில்லை. இலவசங்கள் அனைத்தும் மக்கள் பணம். நியாயமாக மக்களுக்கு வந்து சேர வேண்டிய பணம். ஏழ்மையை இந்த அரசு பாதுகாத்து வைத்திருக்கிறது. நாங்கள் சிறந்த திட்டங்கள் வைத்துள்ளோம். ஏழைகள் தான் ஓட்டு போடுகிறார்கள். பணக்காரர்கள் ஓட்டு போட வருவதில்லை. வாக்களிக்க வந்தாலும் அங்கு நிற்பவர்களை பார்த்து திரும்பி விடுகிறார்கள்.

அரசியல்

அரசியல்

தமிழ்நாட்டை டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டியது மக்கள் நீதி மையத்தின் திட்டம். அதை செய்ய நேர்மையான அரசு. தேவை. ஓட்டுச்சாவடிகளில் நடக்கும் ஊழலை தடுக்க வேண்டியது நமது கடமை. ஊழலை நீக்குவதற்கான தான் அரசியலுக்கு வந்தேன் தொடர்ந்து செயல்படுவேன்.

நான் சிறு விளக்கு

நான் சிறு விளக்கு

அரசியல் பிரசுரங்களில் எதுகை, மோனையுடன் பேசும் அரசு நாங்கள் அல்ல. மக்கள் நீதி மையம் சார்பில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளி ஒருவர் பிரதிநிதியாக நிச்சயம் இருப்பார். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை கிடப்பில் இருக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க இந்த நடவடிக்கை உதவும். இது நேர்மையானவர்கள் கூட்டம். நான் நட்சத்திரம் அல்ல. இனி உங்கள் வீட்டில் உள்ள சிறு விளக்கு. ஊழலுக்கு எதிராக இந்த விளக்கு எரிந்து கொண்டே இருக்கும். அதை அணையாமல் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு" என்றார்.

அமைச்சர்கள் டிஸ்மிஸ்

அமைச்சர்கள் டிஸ்மிஸ்

அதன்பின்னர் அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில். "ஒரே நாளில் 10 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்தவர் எம்.ஜி.ஆர். ஊழலில் சாதனை படைத்தவர்களை நீக்க துணிச்சல் உண்டா?! என்று நான் கேட்பேன். இதுகாறும் 'அம்மா ஆட்சி' என்றே முழங்கிக்கொண்டிருந்தவர்கள் மீண்டும் புரட்சித் தலைவரின் பெயரைப் புழங்க ஆரம்பித்திருக்கிறார்கள். மகிழ்ச்சி. எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கும் முன்னரே, அவரவர் குவித்த சொத்துக்களுக்கு கணக்கு காட்டச் சொன்னவர் வாத்யார். காட்டுவீர்களா? " என்று கூறியுள்ளார்.

 
 
 
English summary
kamal haasan challenged to edapadi palanisamy,"Do you have the guts like mgr to dismiss the corrupt 10 ministers in one day".
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X