திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தரையில் கால் பதிக்காமல் என்னதான் தாழ பறந்தாலும் சோகம் தெரியாது- கமல் விமர்சனம்

Google Oneindia Tamil News

Recommended Video

    புயல் நிவாரணம் குறித்து கமல் பத்திரிகையாளர்கள் சந்திப்பு- வீடியோ

    திருச்சி: தரையில் கால் பதிக்காமல் என்னதான் ஹெலிகாப்டரில் பறந்தாலும் அந்த சோகம் தெரியாது என கமல்ஹாசன் தமிழக அரசை விமர்சனம் செய்துள்ளார்.

    கஜா புயல் கோர தாண்டவம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என கூறி ஒரு வழியாக செவ்வாய்க்கிழமை ஹெலிகாப்டரில் ஆய்வு செய்ய சென்றார்.

    Kamal Haasan tweet that The government has to review in person not in the helicopter

    [நாற்காலியில் அமர்ந்து கொண்டு மேஸ்திரி வேலை பார்க்காதீங்க.. கமல் காட்டம் ]

    குறிப்பிட்ட பகுதியில் ஆய்வு மேற்கொள்ளாமல் திடீரென தனது ஆய்வு பணியை நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். இது பெரும் விமர்சனங்களுக்குள்ளானது. இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, தான் தாழ பறந்த படியே புயல் பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்ததாக விளக்கினார்.

    இந்நிலையில் கஜா புயலினால் பாதிப்படைந்த பகுதிகளுக்கு நேரடியாக சென்று கமல்ஹாசன் பார்வையிட்டு வருகிறார். அவர் மக்களோடு மக்களாக சந்தித்து குறைகளையும் கேட்டறிந்தார்.

    அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் தரையில் கால் பாவிட, மக்களோடு மக்களாக நின்று பார்த்தால், கேட்டால்... புரியும் சோகம், தெரியும் உண்மை! ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது. கேட்கிறதா அரசுக்கு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    English summary
    Kamal Haasan criticises Edappadi Palanisamy review from chopper as Kamal review in cyclone affected areas.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X