திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சட்டசபைத் தேர்தல் வருது...திருச்சி மகளிரணி நிர்வாகிகளை காணொளி மூலம் தேர்வு செய்த கனிமொழி

திருச்சி தெற்கு மாவட்ட திமுக மகளிரணி நிர்வாகிகளை காணொளி மூலம் தேர்வு செய்தார் மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி

Google Oneindia Tamil News

திருச்சி: கொரோனா காலத்தில் எல்லாமே காணொளி மீட்டிங் ஆக மாறிவிட்டது. பள்ளிகளில்தான் ஆன் லைன் வகுப்பு என்று நினைக்க வேண்டாம். அரசியல்கட்சியினர் தங்களின் நிர்வாகிகளைக் கூட ஆன்லைன் மூலம் தேர்வு செய்கின்றனர். காணொளி காட்சி மூலம் பேசி கேள்விகளைக் கேட்டு மகளிரணி நிர்வாகிகளை தேர்வு செய்திருக்கிறார் திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி. கூட்டத்திற்கு வந்திருந்த அனைத்து மகளிரணியினரையும் தெர்மல் ஸ்கேன் பரிசோதனை செய்தே அனுமதித்தனர்.

சட்டசபைத் தேர்தல் வரப்போகிறது. தேர்தலுக்கு எல்லா கட்சியினரும் தயாராகி வருகின்றனர். திமுகவில் இளைஞரணி, தொண்டரணி, மகளிரணி, இலக்கிய அணி என பல்வேறு அணிகளின் கீழ் தொண்டர்கள் பிரித்தெடுக்கப்பட்டு தேர்வு செய்யப்படுகின்றனர்.
தொண்டர்களுக்கு பயிற்சி கொடுத்து தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவார்கள்.

திருச்சியில் தெற்கு மாவட்ட மகளிரணி, தொண்டரணி நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வு கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர், மணப்பாறை பகுதிகளைச் சேர்ந்த மகளிரணியினர் பங்கேற்றனர்.

வீட்டுக்கு வீடு டீசல் விநியோகம் செய்ய அழைப்பு.. இந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட் இருக்கு!வீட்டுக்கு வீடு டீசல் விநியோகம் செய்ய அழைப்பு.. இந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட் இருக்கு!

வாங்க டெஸ்ட் பண்ணுவோம்

வாங்க டெஸ்ட் பண்ணுவோம்

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னர் எங்கே போனாலும் சானிடைசர் கொடுத்துதான் வரவேற்கிறார்கள். பொது இடத்திற்குப் போனாலும் தெர்மல் ஸ்கேன் கொண்டு சோதிக்கிறார்கள். அப்படித்தான் திருச்சியில் மகளிரணி தேர்வுக்கு வந்திருந்த அனைவரையும் முதலில் காய்ச்சல் இருக்கிறதா என்று தெர்மல் ஸ்கேன் கொண்டு சோதனை செய்தனர்.

இடைவெளியோடு அமர்ந்த தொண்டரணி

இடைவெளியோடு அமர்ந்த தொண்டரணி

நன்றாக சுத்தப்படுத்தப்பட்டிருந்த அறையில் சமூக இடைவெளியோடு அனைவரையும் அமர வைத்திருந்தனர். முன்பெல்லாம் இது போன்ற கூட்டத்திற்கு போனால் மகளிரணியினர் ஒருவரை ஒரு சந்தோஷமாக கை குலுக்கி பேசிக்கொண்டிருப்பார்கள். இப்போது யாரும் யாருடனும் எந்த டச்சிங்கும் இல்லாமல் பேசிக்கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.

 காணொளியில் தேர்வு செய்த கனிமொழி

காணொளியில் தேர்வு செய்த கனிமொழி

திமுக மாநில மகளிரணி செயலாளர் காணொளி மூலம் பெண்கள் மத்தியில் பேசினார். கொரோனா காலத்தில் உடல் ஆரோக்கியத்தை கவனிங்க என்று ஆலோசனையும் சொன்னார் கனிமொழி. மூன்று மணிநேரத்திற்கும் மேலாக காணொளி தேர்வு நடைபெற்றது.

திறமைகளை எடுத்துச்சொன்ன எம்எல்ஏ

திறமைகளை எடுத்துச்சொன்ன எம்எல்ஏ

திறமைகளை எடுத்துச்சொன்ன எம்எல்ஏ இந்த தேர்வின் போது தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், திருவெறும்பூர் எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் பங்கேற்றார். மகளிரணி நிர்வாகிகளுக்கு என்னென்ன தகுதிகள் இருக்கின்றன என்று ஒவ்வொருவரைப்பற்றியும் தனது செல்போன் மூலம் கனிமொழிக்கு அப்டேட் செய்து கொண்டிருந்தார்.

திமுக மகளிரணி தயார்

திமுக மகளிரணி தயார்

சட்டசபைத் தேர்தலுக்கு திமுக மகளிரணி தயாராகி வருகிறது. ஒவ்வொரு மாவட்டமாக மகளிரணி நிர்வாகிகளை தேர்வு செய்து சட்டசபைத் தேர்தலுக்கு எப்படி தயாராக வேண்டும் என்று காணொலி மூலமாகவே பயிற்சி அளித்து வருகிறார் கனிமொழி.

English summary
DMK state women's secretary Kanimozhi has selected women executives by talking and asking questions through video conferencing. All the women who came to the meeting were allowed to have a thermal scan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X