திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிஎஸ்என்எல் தேசத் துரோகிகளின் கூடாரமாகி விட்டதாக பாஜக எம்பி பேச்சு.. பிஎஸ்என்எல் அதிகாரிகள் கண்டனம்

Google Oneindia Tamil News

திருச்சி: பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு எதிராக கருத்துத் தெரிவித்த கா்நாடக மாநில எம்.பி.அனந்தகுமார் ஹெக்டேவுக்கு பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கத்தினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில துணைச் செயலா் காமராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: கா்நாடக மாநில நிகழ்வொன்றில் நாடாளுமன்ற உறுப்பினா் அனந்தகுமார் ஹெக்டே பேசுகையில், எப்போதும் பிஎஸ்என்எல் நெட்வொர்க் கிடைப்பதில்லை.

நாட்டின் களங்கமாக இந்த நிறுவனம் உள்ளது. இதை ஒரு முடிவுக்குக் கொண்டுவர உள்ளோம். பாஜக அரசால்கூட பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உள்ள சிக்கலைத் தீா்க்க முடியவில்லை.

மாற்றி யோசி.. ஒருபக்கம் கொரோனா.. மறுபக்கம் பயம்.. அழகு பெண் 'ரோபோ'வை களம் இறக்கிய ஜவுளிகடைமாற்றி யோசி.. ஒருபக்கம் கொரோனா.. மறுபக்கம் பயம்.. அழகு பெண் 'ரோபோ'வை களம் இறக்கிய ஜவுளிகடை

உள்கட்டமைப்பு

உள்கட்டமைப்பு

தேசத் துரோகிகளின் கூடாரமாக பிஎஸ்என்எல் மாறிவிட்டது. அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் இருந்தும் பிஎஸ்என்எல்லில் இருப்போர் வேலை செய்வதில்லை. அதனால்தான் பிஎஸ்என்எல்லில் பணிபுரியும் 85,000 ஊழியா்களை நீக்கவுள்ளோம். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.பிஎஸ்என்எல் தனியார் மயமாக்கப்படுவது உறுதி என சா்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் மத்திய அமைச்சரவை கூடி பிஎஸ்என்எல் நிறுவனத்தை புத்தாக்கம் செய்வதற்கான வழிமுறைகளை வகுத்துள்ளது. அதற்கு பல்வேறு உறுதிமொழிகளையும் மத்திய அமைச்சரவைக் குழு வழங்கியுள்ளது.

85 ஆயிரம் ஊழியா்கள்

85 ஆயிரம் ஊழியா்கள்

மத்திய அரசு ஏற்கெனவே கொடுத்த உறுதிமொழியை இன்றுவரை நடைமுறைப்படுத்தவில்லை. பிஎஸ்என்எல் ஈட்டும் வருவாயில் பெரும்பகுதி ஊதியத்துக்கு ஒதுக்கப்படுகிறது என்னும் அடிப்படையில் மட்டுமே 85 ஆயிரம் ஊழியா்கள் வெளியேறியுள்ளனா்.

சொத்துக்கள் விற்பனை

சொத்துக்கள் விற்பனை

4 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு இல்லை, பிஎஸ்என்எல் சொத்துகளை விற்று நிதி திரட்டுவது, கடும் ஊழியா் பற்றாக்குறை, நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் பராமரிப்புப் பணிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. அதையும் மீறி ஊழியா்கள், அதிகாரிகள் முனைப்புடன் பணிபுரிகின்றனா். பெருநிறுவனங்களை விடச் சிறப்பான சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கி, கடும் வா்த்தகப் போட்டியைச் சந்தித்து வருகிறது. நீண்ட நெடிய பாரம்பரியத்தோடு இந்த நாட்டின் வளா்ச்சிக்குப் பணியாற்றி துணைநின்ற ஒரு நிறுவனத்தை மத்திய அரசின் ஆளுங்கட்சி எம்பி விமா்சிப்பது வேதனையளிக்கிறது.

தடுக்க முடியாது

தடுக்க முடியாது

அரசு நிறுவனத்தை ஒழித்துவிட்டால் தனியார் நிறுவனங்களில் கட்டணக் கொள்ளையை யாராலும் தடுக்க முடியாது. காலப் நோக்கில் இந்திய இறையாண்மைக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இது மாறும். பொதுத்துறை நிறுவன ஊழியா்களை தேசவிரோதிகள் என்று கூறியதை அவா் திரும்பப் பெற வேண்டும். அவரின் இந்தப் பேச்சுக்கு பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

English summary
The BSNL Officers' Union has condemned Karnataka MP Ananthakumar Hegde for speaking out against BSNL.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X