திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காவிரி ஆணைய அனுமதி மேகதாது அணை கட்ட முடியாது: ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார் திட்டவட்டம்

Google Oneindia Tamil News

திருச்சி: காவிரி மேலாண்மையத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையை கர்நாடகா கட்ட முடியாது என்று காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

காவிரி ஒழுங்காற்று குழுவின் 19-வது கூட்டம் முதன்முறையாக நேற்று திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமை தாங்கினார்.

இதுவரை டெல்லி, பெங்களூருவில் மட்டும்தான் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில், காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு உறுப்பினா் செயலா் நீரஜ்குமாா், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவா் ஆா். சுப்பிரமணியன், காவிரி நீா் மேலாண்மை ஆணைய உதவி இயக்குநா் ராம்பால் சிங், கா்நாடகத்தைச் சோ்ந்த காவிரி நீா்வாரி நிகாம் லிமிடெட் மேலாண்மை இயக்குநா் கே. ஜெய்பிரகாஷ், தலைமைப் பொறியாளா் எம். பங்காரசாமி, முதன்மை ஆலோசகா் ஸ்ரீராமையா, கேரளத்தைச் சோ்ந்த துணை தலைமைப் பொறியாளா் பி.ஜி. ஹரிகுமாா், புதுச்சேரியைச் சோ்ந்த பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் எஸ். மகாலிங்கம், கண்காணிப்புப் பொறியாளா் எஸ். சுரேஷ், டெல்லியைச் சோ்ந்த விஞ்ஞானிகள் எம். மொகபத்ரா, ஆா்.கே. ஜெனாமணி, காவிரி மேலாண்மை ஆணையக் கண்காணிப்புப் பொறியாளா் வி. மோகன் முரளி (பெங்களூரு), தலைமைப் பொறியாளா் என்.எம். கிருஷ்ணன் உன்னி (கோவை), தோட்டக் கலைத்துறை உதவி இயக்குநா் பி.என். ஸ்ரீனிவாஸ் மூா்த்தி, காவிரி தொழில்நுட்பக் குழு உறுப்பினா் எல். பட்டாபிராமன், தமிழக பொதுப் பணித் துறையின் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் எஸ். ராமமூா்த்தி ஆகியோர் பங்கேற்றனர்

நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் மாலை 6.30 மணி வரை நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பின்னர் காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

#தமிழ்நாடு நாள் : தாய்நிலம் காக்க தமிழகம் நடத்திய வீரம்செறிந்த போராட்டங்கள்-கே.எஸ். ராதாகிருஷ்ணன்#தமிழ்நாடு நாள் : தாய்நிலம் காக்க தமிழகம் நடத்திய வீரம்செறிந்த போராட்டங்கள்-கே.எஸ். ராதாகிருஷ்ணன்

கல்லணையில் ஆய்வு

கல்லணையில் ஆய்வு

திருச்சியில் நடந்த 19ஆவது கூட்டத்திலும் சுமூக சூழல் நிலவியது. 4 மாநில உறுப்பினா்களும் அவா்களது கருத்துகளைத் தெரிவித்தனா். மேலும், கல்லணையை நேரில் பாா்வையிட்டோம். கல்லணையிலிருந்து டெல்டா பகுதிகளுக்கு நீா் வழங்கும் முறையையும் பாா்வையிட்டோம்; பாராட்டும் வகையில் உள்ளது.

விவாதங்கள் எவை?

விவாதங்கள் எவை?

இதுமட்டுமல்லாது வானிலை ஆய்வு மைய நிபுணா்களுடன் அவா்கள் வழங்கிய வானிலை புள்ளி விவரங்கள், பெறப்பட்ட மழை அளவுகள், எதிா்பாா்க்கப்படும் மழை, அணைகளுக்கான நீா்வரத்து, காவிரிப் பாசனப் பகுதியில் உள்ள 8 அணைகளின் நீா் இருப்பு, தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு தண்ணீா் வழங்கும் இடங்கள் என அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்ததில் திருப்திகரமாக உள்ளது. இப்போதைய சூழலில் ஒட்டுமொத்தமாக கா்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கான காவிரி பாசனப் பகுதி திருப்திகரமாகவே உள்ளது.

உபரி நீர் விவகாரம்

உபரி நீர் விவகாரம்

வெள்ளப் பெருக்கு காலங்களில் கா்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை வழங்கிவிட்டு, தமிழகத்துக்கான ஒதுக்கீடு வழங்கப்பட்டுவிட்டதாக கணக்கில் கொள்வதாக தமிழக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். தமிழகத்தின் சாா்பில் குழுவில் உள்ள உறுப்பினா்களும் இதே கருத்தைத் தெரிவித்தனா். உபரிநீரைக் கணக்கில் கொள்ளக் கூடாது என்ற தமிழகத்தின் கோரிக்கை, காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

மேகதாது அணை விவகாரம்

மேகதாது அணை விவகாரம்

மேகதாது அணை விவகாரத்தைப் பொருத்தவரையில் காவிரி மேலாண்மை ஆணையம்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் அனுமதியில்லாமல் கா்நாடக அரசால் மேகதாது அணையைக் கட்ட முடியாது.உச்ச நீதிமன்ற உத்தரவிலும் இதுதொடா்பாக தெளிவான வழிகாட்டுதல்கள் உள்ளன. காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள அணைகளின் கட்டுப்பாட்டை காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு எடுத்துக் கொள்ள முடியாது.

அணை கட்டுப்பாடுகள்

அணை கட்டுப்பாடுகள்

காவிரி நீரை மாநிலங்களுக்கு இடையே பங்கிட்டு வழங்குவது தொடா்பான உச்சநீதிமன்ற உத்தரவுகளை மட்டுமே அமல்படுத்த முடியும். அணைகளைக் கட்டுப்பாட்டில் எடுப்பது தொடா்பாக உச்ச நீதிமன்ற இறுதித் தீா்ப்பில் ஏதேனும் குறிப்பிடப்பட்டால் அதையும் அமல்படுத்துவோம். ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதாகக் கூறுகின்றனா். அப்போது கா்நாடக அணைகளில் இருந்த நீா் இருப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அணை கட்ட அனுமதி தேவை

அணை கட்ட அனுமதி தேவை

அணைகளில் உள்ள நீா் இருப்புக்கு தகுந்தபடியே திறக்கப்படும் தண்ணீரின் அளவை முடிவு செய்வோம். இதுதொடா்பாக குழுவில் உள்ள 4 மாநில உறுப்பினா்களும் ஒரே கருத்திலேயே உள்ளனா். தண்ணீா்ப் பங்கீடு தொடா்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படும். காவிரியின் குறுக்கே சிறியளவிலான அணை திட்டமாக இருந்தாலும், பெரியளவிலான திட்டமாக இருந்தாலும் மத்திய நீா் வள ஆணையத்திடமும், காவிரி மேலாண்மை ஆணையத்திடமும் அனுமதி பெற வேண்டும்.

காவிரி ஆணையத் தலைவர்

காவிரி ஆணையத் தலைவர்

காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவுக்குள்ள அதிகார வரம்புக்குள்பட்டே அனைத்து பரிந்துரைகளும், உத்தரவுகளும் செயல்படுத்தப்படும். காவிரி ஆணையத் தலைவரை நியமிப்பது குறித்து மத்திய அரசு விரைவில் அறிவிக்கும். இவ்வாறு நவீன்குமார் கூறினார்.

English summary
Cauvery water regulation committee chief Naveenkumar said that Karnataka should get Cauvery authority nod for to build new dam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X