திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யார் அந்த விஐபி.. வசமா சிக்கிய ஸ்வப்னா.. திருச்சியில் விற்றாரா கடத்தல் தங்கத்தை.. பரபர என்ஐஏ விசாரணை

கேரள தங்க கடத்தல் கும்பலுக்கு திருச்சி பிரமுகர்களுடன் தொடர்பு உள்ளதா என விசாரணை நடக்கிறது

Google Oneindia Tamil News

திருச்சி: ஸ்வப்னா கும்பல் கடத்திய தங்கத்தை விற்பனை செய்ததில் தமிழகத்தை சேர்ந்த 2 பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக ஏற்கனவே சொல்லப்பட்டது. தற்போது, திருச்சியை சேர்ந்தவர்களுக்கு இதில் தொடர்புள்ளதா என்ற கோணத்தில், தேசிய புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.. இதற்காக திருச்சியில் முகாமிட்டு விசாரணையையும் மேற்கொண்டு வருவதால் சொப்னா விவகாரம் தமிழகத்திலும் விஸ்வரூபமெடுத்து வருகிறது.

சொப்னா கும்பல் கடத்திய தங்கத்தை விற்பனை செய்ததில் தமிழகத்தை சேர்ந்த 2 விஐபிக்களுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் ஏற்கனவே தெரிய வந்தது. திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் மூலம் கடத்தப்பட்ட தங்கத்தை நகைக்கடைகளுக்கு விற்பனை செய்து வந்ததாக சொப்னா கும்பல் சொன்னது.

kerala swapna: Are Trichy VIP connected with Kerala gold smuggling gang?

இதை முதலில் என்ஐஏ நம்பவில்லை.. பெரும்பாலான கடத்தல் தங்கம், தீவிரவாதிகளுக்கு விற்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. இது தொடர்பான முக்கிய ஆதாரங்கள் இருப்பதால்தான் என்ஐஏயும் அதிரடியாக களத்தில் இறங்கியது... சுங்க இலாகா விசாரணையிலும் இதே விவரங்கள்தான் கிடைத்துள்ளன.

இந்த நிலையில் கடத்தல் தங்கம் பெரும்பாலும் தமிழகத்தில் உள்ள தீவிரவாக கும்பல்களுக்கு விற்பனை செய்யப்பட்ட விவரம் என்ஐஏக்கு கிடைத்தது. இந்த கடத்தலுக்கு துபாயில் உள்ள பைசல் பரீத், சரித்குமார், சந்தீப் நாயர், ரமீஸ் ஆகியோர் மூளையாக செயல்பட்டு வந்துள்ளனர் என்றும், இவர்கள் 4 பேருக்கும் பல தீவிரவாத கும்பல்களுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த கும்பல் திருச்சியில் ஏற்கனவே தங்கம் விற்றதை என்ஐஏ கண்டுபிடித்துள்ளது.

அதனால் ஸ்வப்னா, சரித், சந்திப்நாயா் மற்றும் ரமீஸ் உள்ளிட்ட 16 பேரை, தேசிய புலனாய்வுப் பிரிவு போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா். இது தொடா்பாக சுங்கத் துறையினரும் தனியாக விசாரிக்கின்றனா்.

தங்கக்கடத்தல் ஸ்வப்னா மலையாள சினிமாவிற்கும் பினாமி பைனான்ஸ் - என்ஐஏ விசாரணையில் அம்பலம் தங்கக்கடத்தல் ஸ்வப்னா மலையாள சினிமாவிற்கும் பினாமி பைனான்ஸ் - என்ஐஏ விசாரணையில் அம்பலம்

இந்நிலையில், கேரள தங்கக் கடத்தல் கும்பலுடன், திருச்சியை சோ்ந்த நபா்கள் இணைந்து, கேரளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட தங்கத்தை வட மாநிலங்களில் சென்று விநியோகித்திருப்பதாக கைதான நபா்களில் ஒருவரான ரமீஸ் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

இதையடுத்து இவா்களில் சிலருக்கு நகைக் கடைகளில் கொள்ளையடித்த சிலருடன் தொடா்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், கடந்த சில நாள்களுக்கு , திருச்சியில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்ட தேசிய புலனாய்வுப்பிரிவு போலீஸார் தென்னூா் பகுதியைச் சோ்ந்த சிலரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வெளிநாடுகளிலிருந்து கேரளத்துக்கு கடத்தி வரப்பட்ட தங்கம், திருச்சி கொண்டு வரப்பட்டு, இங்கிருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடா்ந்துள்ளனா். இதுதொடா்பாக சுங்கத் துறையினரும் விசாரணையில் இறங்கியுள்ளனராம்.

English summary
kerala swapna: Are Trichy VIP connected with Kerala gold smuggling gang?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X