திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட்-க்கு எதிராக நடிகர் சூர்யா போல பேசினால் வருமான வரித்துறை மூலம் மிரட்டுது பாஜக- கேஎன்.நேரு

Google Oneindia Tamil News

திருச்சி: நீட் விவகாரத்தில் முதல்வர் பேசியது மட்டும் ஒளிபரப்பியவர்கள், நாங்கள் கொடுத்த பதிலடியை ஒளிபரப்பவில்லை என்று திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு குற்றம்சாட்டினார்.

Recommended Video

    முதல்வருக்கு நாங்கள் கொடுத்த பதிலடியை ஒளிபரப்பவில்லை.. கே.என்.நேரு குற்றச்சாட்டு - வீடியோ

    பாஜகவின் கொள்கைகளை பற்றி விமர்சிப்பவர்களை மத்திய அரசை வருமான வரித்துறையை வைத்து மிரட்டும் செயல்களை ஈடுபடுவதாகவும் கே.என்.நேரு குற்றம்சாட்டினார்.

    திருச்சி .தந்தை பெரியாரின் 142வது பிறந்தநாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த நாள்... முதல்வர் எடப்பாடி, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை! அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த நாள்... முதல்வர் எடப்பாடி, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

    மிரட்டும் செயல்கள்

    மிரட்டும் செயல்கள்

    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.என்.நேரு "மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாஜக கையில் முழுக்க முழுக்க இந்தியா உள்ளது. இதனால் சூர்யா போன்ற நடிகர்கள் நீட்டுக்கு எதிராக பேசினாலும், மக்களுக்கு தேவையான கொள்கைகள் குறித்து பேசினால் வருமான வரியை வைத்து மிரட்டும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    முதல்வர் பேசியது

    முதல்வர் பேசியது

    ஆனால் நீட் தேர்வை பொருத்தவரை தமிழக மக்களின் கொள்கை வழிதான் வெற்றிபெறும். துணை முதல்வர் பதவி குறித்து காங்கிரஸ் பேசவில்லை என்று அழகிரி மறுத்துள்ளார். சட்டசபையில் முதல்வர் பேசியதை மட்டுமே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதற்கு திமுகவினர் கவுண்டர் கொடுத்தது எதுவும் வெளியிடப்படவில்லை.

    ஸ்டெர்லைட் ஆலை

    ஸ்டெர்லைட் ஆலை

    ஜல்லிக்கட்டை தடை நீக்கம் போல, நீட் தேர்விற்கு தடை கேட்டு பெறுவோம். நீட் தேர்வுக்கு திமுக ஆட்சியில் அனுமதி அளித்ததாக கூறுவது தவறு. நீட் தேர்வு குறித்து ஆய்வு நடத்த மட்டுமே திமுக ஆட்சி காலத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. இது குறித்து பேசுபவர்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அனுமதியை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்டது. அது குறித்து பேச மறுக்கின்றனர்.

    70 பேர் மட்டுமே

    70 பேர் மட்டுமே

    விவசாயிகள் கடன் வழங்கும் திட்டத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து கண்டுபிடித்து விட்டோம் என்று சட்டசபையில் அமைச்சர் கூறுகின்றார். 150 கோடி ரூபாய் அளவில் நடைபெற்ற ஊழலில் 70 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். எங்களைப் பொறுத்தவரை உண்மையான அளவு பணத்தை திரும்பப் பெற்று உண்மையான விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் " இவ்வாறு கூறினார்.

    English summary
    DMK chief secretary KN Nehru accused the broadcasters of only broadcasting what the chief minister had said in the NEET affair and not broadcasting the retaliation we had given. KN Nehru also accused the central government of intimidating critics of the BJP's policies with the Income Tax Department.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X