திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"நானும் 20 வருஷமா போய்ட்டு வந்துட்டுதான் இருக்கேன்.. நல்லாதானே இருக்கேன்".. திருச்சி சிவா நச்!

0 வருஷமா டெல்லி போய் வர்றேன், ஆனாலும் இந்தி தெரியாது என திருச்சி சிவா தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

திருச்சி: "நான் ஒரு எம்பி.. 20 வருஷமா டெல்லிக்கு போய்ட்டு வர்றேன்.. நான் நல்லாதான் இருக்கேன்.. ஆனால், எனக்கே ஹிந்தி தெரியாது.. நிர்மலா சீதாராமன் என்ன இப்படி சொல்லுகிறாரே" என்று திருச்சி சிவா எம்பி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

திமுக பொதுக் குழு கூட்டத்தின் ஒரு பகுதியாக, திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் காணொளி காட்சி மூலம் நடந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொது குழு உறுப்பினா்கள், எம்எல்ஏக்களான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செளந்தரபாண்டியன், மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Knowing Hindi wont gives any growth in our Country, says MP Trichy Siva

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, "திமுக பல சோதனை கடந்து வெற்றி கொண்ட இயக்கம்... எந்த நேரத்திலும் தன் லட்சிய பணியை நிறுத்தாது.. இதற்கு உதாரணம்தான் இன்று நடந்த பொதுக்குழு கூட்டம்.

வங்கிகளில் பிராந்திய மொழிகளை பயன்படுத்தக் கூடாது என உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என மத்திய அமைச்சர் நிா்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.. ஆனால், வங்கிகளில் கொடுக்கப்படும் படிவம், ஏ.டி.எம் இயந்திரங்களிலும் பிராந்திய மொழிகள் பயன்படுத்தவில்லை... இதை ஆதாரத்துடன் நான் அவருக்கு அனுப்பியுள்ளேன்.

சிறப்பு ரயில்களில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டண சலுகையை ரத்து செய்வதா? கனிமொழி எதிர்ப்புசிறப்பு ரயில்களில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டண சலுகையை ரத்து செய்வதா? கனிமொழி எதிர்ப்பு

அனைத்து வங்கிகளிலும் மாநில மொழியைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட வேண்டும்... நாட்டில் பேசப்படும் அனைத்து மொழிகளும் சம அந்தஸ்து கொண்டவை. ஹிந்தி மொழியை படித்தால்தான் வளா்ச்சி அடைய முடியும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை.

ஒரு மொழியை கொண்டு இதர மொழிகளை அழிக்கவோ, திணிக்கவோ முற்படும்போது எதிர்ப்பு வருவது இயல்பு. 20 வருஷமாக எம்பியாக டெல்லிக்கு சென்று வருகிறேன். ஆனால், எனக்கு ஹிந்தி தெரியாது... நான் நன்றாகத்தான் இருக்கிறேன்... அதனால், ஹிந்தி மொழியால் ஒருத்தர் வளா்ச்சியடைந்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை" என்றார்.

English summary
knowing Hindi wont gives any growth in our Country, says MP Trichy Siva
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X