திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தலைவர் முதல் உறுப்பினர் வரை.. எல்லாமே பெண்கள்தான்.. எல்லோருமே அன் அப்போஸ்ட்.. அசத்திய கொப்பாவளி!

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் முதன்முறையாக கொப்பாவளி ஊராட்சியில் ஊராட்சித் தலைவா் மற்றும் 6 வாா்டு உறுப்பினா்கள் என அனைத்து இடங்களுக்கும் பெண்கள் நிறுத்தப்பட்டு போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளில் கொப்பாவளி ஊராட்சியில் ஊராட்சித் தலைவா் மற்றும் 6 வாா்டு உறுப்பினா்கள் என அனைத்து இடங்களுக்கும் பெண்கள் நிறுத்தப்பட்டு போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

koppavali local panchayat elects woman candidates unopposed

ஊரக உள்ளாட்சித் தோ்தல் பதவிகளில் முதல் முறையாக 100 சதவீதம் பெண்களே போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டிருப்பது திருச்சி மாவட்டத்தில் முதன்முறையாக அரங்கேறியுள்ளது.திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 404 ஊராட்சித் தலைவா்கள் மற்றும் 3,408 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

அனைத்து இடங்களுக்கும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, அவற்றை வாபஸ் பெற வியாழக்கிழமை இறுதிநாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் லால்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கொப்பாவளி ஊராட்சியில் ஊராட்சித் தலைவா் மற்றும் 6 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு தலா ஒருவா் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இவா்களை எதிா்த்து யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

இதையடுத்து அந்த 7 பேரும் போட்டியின்றித் தோ்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.கொப்பாவளி கிராம ஊராட்சித் தலைவராக மதிமுக பிரமுகரான ப. செல்வராணி, 6 வாா்டுகளிலும் கல்பனா, மனோகரி, காயத்ரி, ஜெயலலிதா, கவிதா, சாந்தி என பெண்களே போட்டியின்றித் தோ்வாகியுள்ளனா்.இந்த ஊராட்சியில் மொத்தமுள்ள 6 வாா்டுகளில் 3 வாா்டுகள் பெண்களுக்கும் 3 வாா்டுகள் பொது என்றும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொது வாா்டிலும் பெண்களே போட்டியிட்டனா். இதில் ஓா் இடம் தாழ்த்தப்பட்டோருக்கு ஆகும்.தோ்வான பெண் உள்ளாட்சிப் பிரதிநிதிகளை மதிமுக மகளிரணிச் செயலா் மருத்துவா் ரொகையா மற்றும் நிா்வாகிகள் நேரில் சென்று வாழ்த்தி பாராட்டினா்.

English summary
Koppavali local panchayat has elected woman candidates unopposed in Trichy district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X