திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பகலில் நோட்டம்.. இரவில் ஓட்டை.. 5 நாளாக சுவற்றில் கொஞ்சம் கொஞ்சமாக.. அதிர வைத்த முருகன் & கோ!

லலிதா ஜுவல்லரி கொள்ளையில் புது தகவல்கள் வெளியாகி உள்ளன

Google Oneindia Tamil News

Recommended Video

    திருட்டு முருகன் வாக்குமூலம் ஓட்டையும் போட்டது நான்தான்.. அதான் எனக்கு மட்டும் 12 கிலோ நகை

    திருச்சி: பகலில் நோட்டம்.. இரவில் ஓட்டை.. மொத்தம் 5 நாளாக சுவற்றில் கொஞ்சம் கொஞ்சமாக ஓட்டையை போட்டுள்ளனர் முருகன் & கோ!

    லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் இதுவரை மொத்தம் 23 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது. கொள்ளையடிக்க 2 மாசமாக திருச்சியில் வீடு எடுத்து முருகன் தங்கி இருந்தது ஏற்கனவே வெளிவந்த தகவல்தான். நகை கடையை கொள்ளையடிக்க ரொம்ப நாளாகவே குடும்பத்துடன் நோட்டமிட்டுள்ளான் முருகன்.

    இதைவிட முக்கியமான விஷயம், 2 மாசத்துக்கு முன்பு இதே லலிதா ஜூவல்லரி கடைக்கு நகை வாங்குவதுபோல, இவர்கள் எல்லாருமே கடைக்கு வந்திருக்கிறார்கள். அப்போதுதான் எந்த இடம் கொள்ளையடிக்க வசதியாக உள்ளது என்று நோட்டம் போட்டுள்ளனர்.

    இடது பக்கம்

    இடது பக்கம்

    கடைக்கு இடது பக்கத்தை அப்போதுதான் தேர்வு செய்தனர். அந்த இடத்தில் ஓட்டை போட்டால், கடைக்குள் இந்த பகுதிக்கு எளிதாக வரலாம் என்று பிளான் செய்தபிறகுதான் கடையை விட்டு வெளியே வந்துள்ளனர். இதற்கு பிறகு, தினமும் ராத்திரி நேரத்தில் இங்கு இவர்கள் வந்துவிடுவார்களாம். சத்தமே வராத மாதிரி சுவரில் கொஞ்சம் கொஞ்சமாக ஓட்டை போட ஆரம்பித்துள்ளனர்.

    ஓட்டை

    ஓட்டை

    இப்படியே செப்டம்பர் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஓட்டை போட்டுள்ளனர். அதாவது ஓட்டை போடுவதற்கு மட்டும் மொத்தம் 5 நாள் ஆகியிருக்கிறது. இந்த துளையை போடுவதில் முருகன் கில்லாடியாம். பகலில் திருச்சியை காரில் ரவுண்டு அடிக்க வேண்டியது, நைட் ஆகிவிட்டால் ஓட்டை போடும் வேலையை பார்ப்பது என்றே இருந்திருக்கிறார்கள்.

    கணேசன்

    கணேசன்

    4 பேர் சேர்ந்துதான் இந்த கொள்ளையை செய்துள்ளனர். முருகன், நண்பன் கணேசன் கடைக்கு உள்ளே சென்றனர். வெளியில் 2 பேர் காவலுக்கு வைத்துள்ளனர். உள்ளே போனதும் முதல்ல பெரிய நகைகளை அள்ளி சூட்கேசுக்குள் போடுமாறு சைகை காட்டியது முருகன்தான்.

    டிரஸ் - மாஸ்க்

    டிரஸ் - மாஸ்க்

    சிசிடிவி காட்சியில் முகமூடி அணிந்து இருப்பது முருகனும், கணேசனும்தான். முதலில் சுரேஷ்தான் உள்ளே போவதாக இருந்ததாம். ஆனால் சுரேஷ் கொஞ்சம் குண்டு என்பதால், அவனுக்கு பதில் கணேசனுக்கு அந்த டிரஸ்ஸை மாட்டி உள்ளே அழைத்து போயிருக்கிறான் முருகன்.

    கயிறு சிக்னல்

    கயிறு சிக்னல்

    வழக்கமாக திருட்டு சமயங்களில் வாக்கி டாக்கி பயன்படுத்துவார்களாம். இப்படித்தான் சென்னையில் ஒரு கொள்ளையில் வாக்கி-டாக்கியை முருகன் பயன்படுத்தி உள்ளார். கடைசியில் அவரை போலீசார் அள்ளி கொண்டு போய்விட்டனர். அது முதல் இப்போதெல்லாம் கொள்ளைக்கு வாக்கி டாக்கி இல்லையாம். வெறும் சைகை மற்றும் கயிறுதான். இந்த கயிறுமூலம்தான் 4 பேருக்குள்ளும் சிக்னல் பரிமாற்றம் நடந்துள்ளது.

    12 கிலோ நகை

    12 கிலோ நகை

    அநேகமாக இந்த கொள்ளையில் 12 கிலோ நகை லம்ப்பாக கிடைக்கவும், இதோடு பெங்களூரில் ஹாயாக செட்டில் ஆகிவிடலாம் என்று முருகன் கணக்கு போட்டிருந்தான். அந்த கணக்கு எல்லாம் சுக்குநூறாக நொறுங்கிவிட்டது.

    English summary
    gang leader muruga and his companions have been drilling 5 days in the lalitha jewellery shop wall
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X