திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லலிதா ஜுவல்லரி கொள்ளை.. அன்று இரவு மழை பெய்தது.. அதுதான் எங்களுக்கு சாதகமானது.. பரபர வாக்குமூலம்!

திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளை எப்படி நடந்தது என்று முக்கிய வாக்குமூலத்தை கைதான கொள்ளையன் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Lalitha Jwewllery theft at Trichy | லலிதா ஜுவல்லரி கொள்ளையன் சிக்கினான்.. இன்னொருவன் தப்பி ஓட்டம்

    திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளை எப்படி நடந்தது என்று முக்கிய வாக்குமூலத்தை கைதான கொள்ளையன் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

    கடந்த 2ம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளை நடந்தது. முகத்தில் மாஸ்க் அணிந்து, இரவோடு இரவாக லலிதா ஜுவல்லரி சுவரை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளனர்.

    மொத்தம் 30 கிலோ தங்க நகைகள் அந்த பகுதியில் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

    நடிகர் செந்தில் உறவினரின் 300 பவுன் கொள்ளையில் திடீர் திருப்பம்... மைத்துனியே விற்று விட்டு நாடகம் நடிகர் செந்தில் உறவினரின் 300 பவுன் கொள்ளையில் திடீர் திருப்பம்... மைத்துனியே விற்று விட்டு நாடகம்

    கொள்ளையடிக்கப்பட்டது

    கொள்ளையடிக்கப்பட்டது

    இந்த நிலையில் இந்த கொள்ளை எப்படி நடந்தது என்று முக்கிய வாக்குமூலங்களை கைதான மணிகண்டன் தெரிவித்துள்ளார். அதன்படி முருகன் பல நாட்களுக்கு முன்பே இந்த கொள்ளை குறித்த திட்டத்தை கூறிவிட்டார். இதற்காக அந்த நகை கடையை தீவிரமாக கண்காணித்து வந்தோம். நான்கு வாட்ச்மேன்களையும் தீவிரமாக கண்காணித்தோம்.

    நகை கடை

    நகை கடை

    இந்த நகை கடைக்கு அருகே பக்கத்தில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதனால் இரவில் அவ்வப்போது சத்தம் கேட்கும். இதை பயன்படுத்தி சுவரை இடித்தோம். இதனால் கடையில் சுவரில் துளை போட்ட போது யாருக்கும் பெரிதாக சந்தேகம் வரவில்லை.

    எப்படி காத்திருப்பு

    எப்படி காத்திருப்பு

    அங்கே எப்போது ஆட்கள் இருக்க மாட்டார்கள். எப்போது போலீஸ் ரோந்து இருக்காது என்று தீவிரமாக கண்காணித்தோம். அதனால் அதிகாலை 4.30 மணிக்குத்தான் கடைக்கு உள்ளே நுழைந்தோம் என்று கூறி உள்ளனர்.

    எப்போதும் எப்படி

    எப்போதும் எப்படி

    அந்த கடைக்கு வெளியே எப்போதும் 10 நாய்கள் இருக்கும். அதை எப்படி சமாளித்தார்கள் என்றும் மணிகண்டன் தெரிவித்துள்ளார். நாங்கள் அந்த நாயை சமாளிக்க ஏற்பாடுகள் செய்து இருந்தோம். ஆனால் அதற்கு தேவையில்லாமல் போய்விட்டது. நாங்கள் கொள்ளையடித்த அன்று இரவு மழை பெய்தது.

    எங்கே சென்றது

    எங்கே சென்றது

    இதனால் அங்கிருந்த நாய்கள் எல்லாம் எங்கேயோ போய்விட்டது. நாங்கள் கொள்ளையடிக்க சென்ற போது அங்கு நாய்களே இல்லை. இது எங்களுக்கு உள்ளே செல்ல சாதகமாக இருந்தது, என்று மணிகண்டன் கூறியுள்ளார். இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முருகன் இன்னும் கைதாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Trichy Lalitha Jewellers Robbery gave a statement on their heist to Police.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X