திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லலிதா ஜுவல்லரி கொள்ளை.. மணிகண்டன், கனகவள்ளி மீது குண்டாஸ் சட்டம்.. போலீஸ் அதிரடி நடவடிக்கை!

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு தொடர்பாக இரண்டு பேர் மீது திருச்சி போலீசார் குண்டர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு தொடர்பாக இரண்டு பேர் மீது திருச்சி போலீசார் குண்டர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் மொத்தம் 30 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. கடந்த மாதம் 2ம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளை நடந்தது.இது தொடர்பான விசாரணையை போலீசார் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

Lalitha Jewellers Robbery: Gundas act imposed against Manikandan and Kanagavalli

சுவரில் துளையிட்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள், மாஸ்க் அணிந்து கொள்ளையடித்தது பெரிய வைரலானது. இதில் தலைமறைவாக இருந்த முருகன்தான் முக்கிய குற்றவாளி ஆவார். இவரை போலீசார் 7தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

கடைசியில் முருகன் பெங்களூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இவரை திருச்சி போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர். அதேபோல் இந்த கொள்ளையில் முக்கிய கைகளான மணிகண்டன் மற்றும் கனகவள்ளி ஆகியோரும் போலீசால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு பின் பெரிய கூட்டமே திட்டம் போட்டு இயங்கி இருக்கிறது. இதில் மேலும் பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படலாம் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில்தான் இவர்கள் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளைக்கு வழக்கு தொடர்பாக மணிகண்டன் மற்றும் கனகவள்ளி இரண்டு பேர் மீதும் திருச்சி போலீசார் குண்டர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருவரும் மீண்டும் தவறு செய்ய வாய்ப்புள்ளது என்பதால் குண்டாஸ் சட்டம் போடப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர். இதனால் இவர்கள் இருவரும் ஜாமீனில் வெளியே வர முடியாது.

English summary
Lalitha Jewellers Robbery: Gundas act imposed against Manikandan and Kanagavalli in Trichy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X