திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெரிய கூட்டமே இருக்கு.. 16 பேரிடம் தீவிர விசாரணை.. லலிதா ஜுவல்லரி கொள்ளையில் அடுத்தடுத்த திருப்பம்!

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளைக்கு பின் பெரிய கூட்டமே இயங்கி இருக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவிக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Lalitha Jewellery Robbery | தப்பிக்க பார்த்த மணிகண்டன்..விரட்டி பிடித்த எஸ்.ஐ

    திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளைக்கு பின் பெரிய கூட்டமே இயங்கி இருக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவிக்கிறார்கள். இந்த கொள்ளையில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

    திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் மொத்தம் 30 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. கடந்த 2ம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளை நடந்தது.

    இது தொடர்பான விசாரணையை தற்போது போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர். சுவரில் துளையிட்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள், மாஸ்க் அணிந்து கொள்ளையடித்தது பெரிய வைரலானது.

    எப்படி

    எப்படி

    இந்த நிலையில் இந்த கொள்ளை தொடர்பாக தற்போது 16 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் தலைமறைவாக இருக்கும் முருகன்தான் முக்கிய குற்றவாளி ஆவார். அவரின் உறவினர்கள் ஐந்து பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

    சுரேஷ் உறவினர்

    சுரேஷ் உறவினர்

    அதேபோல் சுரேஷ் என்ற கொள்ளையனின் உறவினர்கள் 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொள்ளையில் மொத்தம் 30 கிலோ தங்கம் திருடப்பட்டது. இந்த 30 கிலோ தங்கத்தை யாரிடம் கொடுத்து இருக்கிறார்கள் என்பதுதான் தற்போது முக்கிய கேள்வியாக உள்ளது.

    என்ன கேள்வி

    என்ன கேள்வி

    அதை யாரிடம் எல்லாம், எப்படி பிரித்து கொடுத்து இருக்கிறார்கள் என்றும் கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே சிலரிடம் இருந்து சில கிராம் நகைகள் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நகைகளை மீட்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதில் முருகனிடம்தான் அதிகமாக நகை இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    மிக தீவிரம்

    மிக தீவிரம்

    இதனால் அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள். இவர்களுக்கு பின் பெரிய கூட்டமே திட்டம் போட்டு இயங்கி இருக்கிறது. இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் இதில் மேலும் பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படலாம் என்று கூறுகிறார்கள்.

    English summary
    Lalitha Jewellers Robbery: Police arrested 16 people regarding the case so far.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X