திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சார்.. எங்க அம்மாவை காணோம்.. அண்ணனையும் காணோம்".. கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த ஆட்டுக்குட்டி!

Google Oneindia Tamil News

திருச்சி: "கலெக்டர் சார்.. என் அம்மாவையும் காணோம்... என் அண்ணனையும் காணோம்.. எப்படியாச்சும் கண்டுபிடிச்சு தாங்க" என்று ஒரு ஆட்டுக்குட்டி கலெக்டரிடம் மனு அளித்துள்ளது!

Recommended Video

    எங்க அம்மாவை கணோம்... கலெக்டரிடம் மனு கொடுத்த ஆட்டுக்குட்டி

    திருச்சி மாவட்டம், உறையூர் காசிசெட்டி தெருவை சேர்ந்தவர் சரவணகுமார்... இவர் ஒரு விவசாயி.. 3 ஆடுகளை இவர் வளர்த்து வந்துள்ளார்.

    Lamb has petitioned the the trichy collector

    ஆனால் சில தினங்களுக்கு முன்பு யாரோ ராத்திரி நேரத்தில் வந்து 2 ஆடுகளை திருடி சென்றுவிட்டனராம்.. இதுதொடர்பாக, உறையூர் போலீஸ் ஸ்டேஷனில் சரவணகுமார் புகார் அளித்துள்ளார்.. ஆனால் அதன்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

    தனது மனு மீதான நடவடிக்கை தொடர்பாக ஆன்-லைன் மூலமும் சரவணகுமார் சரி பார்த்துள்ளார்.. அப்போதும் எந்த முன்னேற்றமில்லை என்றுதான் இவருக்கு பதில் கிடைத்துள்ளது. அதனால் திரும்பவும் காணாமல் போன ஆடுகள் குறித்து ஒரு மனு தந்தார்.. ஆனால், அந்த புகாரின்பேரிலும் நடவடிக்கை எடுக்கப்படாமல், மனு நிலுவையிலேயே உள்ளதாக சொல்லப்படுகிறது.

    இதையடுத்த நாமளா போய் மனு தந்தால் வேலைக்கு ஆகாது என்று சரவணகுமார் நினைத்தார்.. அதேசமயம், திருடுபோன ஆடுகளும் கிடைக்க வேண்டும் என்று நூதனமாக ஒரு ஐடியா செய்தார்.. அதன்படி தன்னுடைய ஆட்டுக்குட்டியின் கழுத்தில் திருச்சி மாவட்ட கலெக்டருக்கு ஒரு மனு எழுதி தொங்கவிட்டார்.. ஒரு போர்டில் "என் அம்மாவையும், அண்ணனையும் மீட்டுத்தாருங்கள்" என்று எழுதி, அதைதான் ஆட்டுக்குட்டி கழுத்தில் தொங்கவிட்டார்.

    ஊருக்கு மட்டுமே.. கொரோனா உத்தரவை மீறிய எடியூரப்பா... 2000 பேருடன் கல்யாணத்தில் கோலாகல பங்கேற்பு!ஊருக்கு மட்டுமே.. கொரோனா உத்தரவை மீறிய எடியூரப்பா... 2000 பேருடன் கல்யாணத்தில் கோலாகல பங்கேற்பு!

    அந்த ஆட்டுக்குட்டி வெள்ளை கலரில் பார்ப்பதற்கே கியூட்-ஆக இருந்தது. கழுத்தில் போர்டு தொங்க, ஆட்டுக்குட்டியை சரவணகுமார் தூக்கி கொண்டு திருச்சி கலெக்டர் ஆபீசுக்கு புகார் மனு அளிக்க வந்திருந்தார். அங்கு ஏற்கனவே மனு கொடுக்க நிறைய பேர் வரிசையில் நின்றிருந்தனர்.. ஆட்டுக்குட்டியுடன் அந்த வரிசையில் வந்து நின்றார் சரவணகுமார்.

    இதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.. இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.. விரைவில் ஆட்டுக்குட்டிக்கு அதன் அம்மாவும், அண்ணனும் கிடைத்துவிடுவார்கள் என்றே நம்புவோம்!!

    English summary
    Lamb has petitioned the trichy district collector that her mother and brother are missing
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X