திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிறைக்குள்ளும் பரவிய கொரோனா.. திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதிக்கு தொற்று உறுதி

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திண்டுக்கல்லை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதிகள், ஆயுள் தண்டனை கைதிகள் என 600-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக கைதிகள் பலர் பரோலில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

 life imprisonment prisoner infected with covid 19 in Trichy Central Jail

இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கைதி ஒருவர், கடந்த 2015-ம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் உள்பட 5 பேர் கடந்த மார்ச் மாதம் 12-ந்தேதி, அதாவது ஊரடங்கு அறிவிக்கப்படும் முன்பே சென்னை புழல் சிறைக்கு பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு, தண்டனை காலம் முடிந்த பின்னர், திருந்தி வாழ்வதற்கான வழிமுறைகள் குறித்தும், சுயதொழில் செய்வதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது.

சென்னை டூ கோவை.. விமானத்தில் வந்த 24வயது பயணிக்கு கொரோனா.. 93 பேர் விமானத்தில் இருந்ததால் அதிர்ச்சிசென்னை டூ கோவை.. விமானத்தில் வந்த 24வயது பயணிக்கு கொரோனா.. 93 பேர் விமானத்தில் இருந்ததால் அதிர்ச்சி

Recommended Video

    ஹைட்ராக்சி குளோரோகுயின் சோதனைக்கு தடை - இந்தியா காட்டம்

    பின்னர் கடந்த 22-ந்தேதியன்று, சென்னை புழல் சிறையில் இருந்து 5 பேரும் பயிற்சி முடித்து திருச்சி மத்திய சிறைக்கு திரும்பினர். இங்கு 5 பேருக்கும், சளி மற்றும் ரத்தம் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. அவர்களில் திண்டுக்கல் ஆயுள் தண்டனை கைதிக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 4 பேருக்கும் கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது.

    English summary
    life imprisonment prison infected covid 19 in Trichy Central Jail. alredy two prisoners affected coronavirus in cuddlaore jail
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X