திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சென்ட்டிமென்ட்".. நேரு ஒரு ரூட்.. மகேஷ் இன்னொரு ரூட்.. தொடரும் சுணக்கம்.. திணறும் திமுக..!

திருச்சி திமுகவில் தொடருகிறது உட்கட்சி பூசல்

Google Oneindia Tamil News

திருச்சி: நேரு ஒரு ரூட்டில் போனால், மகேஷ் ஒரு ரூட்டில் போகிறாராம்.. திருச்சியில் இந்த விவகாரம்தான் நடந்துகொண்டிருக்கிறது.

திருச்சி திமுவில் 25 வருஷத்துக்கும் மேலாக கோலாச்சி வருபவர் கே.என்.நேரு... கட்சி ரீதியாக 2018-ம் ஆண்டு அந்த மாவட்டம் 2-ஆக பிரிக்கப்பட்ட போது தெற்கு மாவட்ட செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார்.

சில மாதங்களுக்கு முன்பு அவர் கட்சியின் முதன்மைச் செயலாளராக அறிவிக்கப்பட்டதால் அவர் வகித்து வந்த திருச்சி மாவட்ட செயலாளர் பொறுப்பு மகேஷ் பொய்யாமொழிக்கு வழங்கப்பட்டது. இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்த மகேஷ் பொய்யாமொழி திருச்சி மாவட்ட அரசியலில் களம் இறங்கியது முதலே இரு தரப்பிற்கும் மெல்ல உரசல்கள் தொடங்கிவிட்டன.

டார்லிங் என ரம்யாவிடம் வழியும் சோம்.. தனி காதல் ட்ராக்கா..? கடலை போடும் இடமான பிக்பாஸ் வீடு!டார்லிங் என ரம்யாவிடம் வழியும் சோம்.. தனி காதல் ட்ராக்கா..? கடலை போடும் இடமான பிக்பாஸ் வீடு!

 ஆதரவாளர்கள்

ஆதரவாளர்கள்

நாளடைவில், நேருவின் ஆதரவாளர் பலரே மெல்ல மெல்ல அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் அணியில் இணையத் தொடங்கியிருக்கிறார்கள். நேருவுக்கும் அன்பில் மகேஷுக்கும் நேரடியாகவும் பெரிதாகவும் எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும், திருச்சி மாவட்ட சில ஆதரவாளர்களினால் இணக்கமான போக்கு ஏற்படவில்லை. ஒருசில நிகழ்ச்சிகளிலும் அடித்து ஒட்டப்பட்ட போஸ்டர்களிலேயே இது சர்ச்சையாக உருவெடுத்தது.

 போஸ்டர்

போஸ்டர்

திமுகவின் மூத்த தலைவர்கள் சிலர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் சூழலில், திருச்சியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் நேருவின் போட்டோ இடம்பெறாதது விவாதமாக மாறியது. இப்போது அடுத்த பிரச்சனை வெடித்துள்ளது.

திருவெறும்பூர்

திருவெறும்பூர்

இப்போது திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவாக உள்ள மகேஷ், வரும் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட விரும்புகிறாராம்.. இதற்கு காரணம், தன்னுடைய அப்பா, சித்தப்பா எல்லாருமே திருச்சி கிழக்கு தொகுதியில்தான் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதனால் சென்ட்டிமென்ட்டுக்காக அதே தொகுதியில் போட்டியிட யோசித்து வருகிறார்.

 வெள்ளாளர் சமூகம்

வெள்ளாளர் சமூகம்

ஆனால், இதற்கு நேரு குறுக்கே நிற்கிறாராம்.. அதற்கு காரணம், அந்த தொகுதியில்தான் வெள்ளாளர் சமூகத்தினர் அதிகமாக வசித்து வருகிறார்களாம்.. எனவே அந்த சமுதாய மக்களை திருப்திப்படுத்தவே, அவங்களுக்கு தான் சீட் தர வேண்டும் என்று தன் விருப்பத்தை கட்சி தலைமைக்கு தெரிவித்து வருகிறாராம்.

கவலை

கவலை

இப்போது, இந்த தொகுதி யாருக்கு ஒதுக்கப்படும்? என்ற அடுத்த பிரச்சனை திருச்சியில் ஆரம்பமாகி உள்ளதாக கூறப்படுகிறது.. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஆனால், நாளுக்கு நாள் திருச்சி திமுகவில் இப்படி கருத்து மோதல்கள் வெடித்து வருவது, மாவட்ட மக்களை கவலைக்கு உள்ளாக்கி வருகிறது.

English summary
Local Politics between KN Nehru Magesh in Trichy DMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X