• search
திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அன்பில் மகேஷை பாராட்டி.. லீலா வேலு அடித்த போஸ்டர்.. கே.என்.நேரு மிஸ்ஸிங்.. உக்கிரமடையும் கோஷ்டிபூசல்

|

திருச்சி: சுத்தம்.. கேஎன் நேரு போட்டோ கூட இல்லாமல் திருச்சியில் போஸ்டர் அடிச்சி ஒட்டிட்டாங்களாம்.. ஏற்கனவே அன்பில் மகேஷ் காரணமாக, உட்கட்சி பூசலால் சிக்கி திணறி வரும் திமுகவில் இன்னொரு பூகம்பம் திருச்சியில் வெடித்துள்ளது. !

தேர்தலில் போட்டியிட தயங்கிய துரைமுருகன்... தயாளு அம்மாள் தந்த ரூ10,000... ஸ்டாலின் சொன்ன ப்ளாஷ் பேக்

திமுகவில் நீண்ட காலம் உறவில் இருந்து வருபவர் முன்னாள் அமைச்சர் கேஎன் நேரு... ஸ்டாலினுக்கு ரொம்பவே வேண்டப்பட்டவர். இது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு திமுக மாநில அணி துணை செயலாளரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திமுகவின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்.

அத்துடன் கட்சி தலைவர் முக ஸ்டாலினுக்கு இவரும் ரொம்பவே நெருக்கம். மேலும் திமுக பரம்பரையை சேர்ந்தவர். ஆனால் நேருவுக்கும், மகேஷ் பொய்யாமொழிக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம்தான்... திருச்சி தொகுதியை இருவருமே கேட்டதாகவும் தர்மசங்கடத்தில் திமுக நெளிந்ததாகவும் கடந்த தேர்தலின்போதே சொல்லப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைகிறது.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

திருச்சி திமுக

திருச்சி திமுக

இப்போது இந்த விரிசல் இன்னும் பெரிதாகி வருகிறது.. திமுகவில் தேர்தலை மையமாக வைத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3 மாவட்ட செயலாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்... ஏற்கனவே திருச்சி தெற்கு, வடக்கு என இருந்தது தற்போது மத்திய மாவட்டம் என திருச்சியில் 3 மாவட்ட செயலாளர்கள் இயங்குகின்றனர்.

அன்பில்

அன்பில்

இவர்களில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி ஆகியோர் நேருவின் தீவிர ஆதரவாளர்கள் என்பதால், நேரு முதன்மைச்செயலாளராக இருந்தாலும் இந்த இரு மாவட்டங்களின் அசைவுகள் அனைத்தும் அவரது கண்ணசைவில்தான். ஆனால் திருவெறும்பூர் எம்எல்ஏவும், தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான மகேஷ் அன்பில் பொய்யாழொழி தனது முழு கட்டுப்பாட்டில் தெற்கு மாவட்ட திமுகவினரை கொண்டு வரும் முயற்சியில் முழு கவனம் செலுத்தி வருகின்றார்.

 பொறுப்புகள்

பொறுப்புகள்

அந்த வகையில் சமீபத்தில் திருச்சி தெற்கு மாவட்ட மகளிரணிக்கான பொறுப்புகள் அறிவிக்கப்பட்டது. அதில் 3-வது முறையாக தெற்கு மாவட்ட மகளிரணி செயலாளராக லீலா வேலு தேர்வு செய்யப்பட்டார்... கடந்த 2 முறையும் லீலா வேலு பொறுப்பில் இருக்கும்போது அவரை தேர்ந்தெடுக்க பரிந்துரைத்தவர் நேருதான்.. ஆனால், இந்தமுறை இவர் தேர்வாகும்போது தெற்கு மாவட்ட செயலாளரக மகேஷ் பொய்யாமொழி பொறுப்பு வகிக்கின்றார்.

 போஸ்டர்கள்

போஸ்டர்கள்

இந்த சூழலில் லீலா தேர்வானதும் மாநகர் முழுவதும் நன்றி தெரிவிக்கும் போஸ்டர் ஒன்றை அடித்து ஊரெல்லாம் ஒட்டி உள்ளார்.. திருச்சி திமுகவில் அடிக்கப்படும் எந்த போஸ்டர் என்றாலும் அதில் திமுக நேரு போட்டோ கண்டிப்பாக இருக்கும்.. ஆனால் இதில் நேரு போட்டோ சின்னதாக கூட இல்லை. ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுக செயலாளராக கடந்த 25 வருஷத்துக்கும் மேலாக இருந்தவர் என்ற முறையிலும் போட்டோவை காணோம்.

 பூகம்பம்?

பூகம்பம்?

இப்போது திமுக முதன்மை செயலாளராக இருக்கிறவர் என்ற முறையிலும் போட்டோவை காணோம்.. இந்த போஸ்டர் விவகாரத்தினால் திருச்சி திமுகவில் உட்பூசல்கள் வெளிப்படையாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன... பதவிக்காக நன்றி மறந்தாரா லீலா? என்ற கேள்வியையும் நேரு ஆதரவாளர்கள் முன் வைத்து வருகின்றனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
local politics in trichy dmk between kn nehru and anbil mahesh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X