திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பலமுறை கூப்பிட்டும் மனைவி வரவில்லை.. நான் கோழையும் இல்லை" லட்டர் எழுதிவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்

தூக்கிட்டு திருச்சி இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்

Google Oneindia Tamil News

திருச்சி: "சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுட்டாள்.. என் மனைவியை திருப்திப்படுத்த முடியல.. அதான் தற்கொலை செய்கிறேன்.. அதற்காக நான் கோழை இல்ல.. அப்பாவி ஆண்களுக்கு எதிரான பெண் வன்கொடுமை சட்டத்துக்கு இது சமர்ப்பணம்" என்று தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் கடிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு.. 27 வயதாகிறது.. அந்த பகுதியில் ஒரு மிட்டாய்கடையை நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி பெயர் தாமினி.. 25 வயதாகிறது.. கல்யாணம் ஆகி ஒன்றரை வருஷம் ஆகிறது.. 7 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

 lockdown crime: youth commits suicide over family problems near trichy

இந்நிலையில், மிட்டாய்கடையில் சரியாக வியாபாரம் ஆகவில்லை.. வருமானமும் குறைந்து வந்துள்ளது.. இதனால் தம்பதிக்கு இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.. ஒருநாள் அப்படி தகராறு வரவும், தாமினி குழந்தையுடன் அவர் அம்மா வீட்டுக்கு கிளம்பி சென்றுவிட்டார்.

எத்தனையோ முறை மனைவியை சமாதானப்படுத்த பிரபு மாமியார் வீட்டுக்கு சென்றார்.. வருமானத்தை காரணம் காட்டி, வீட்டுக்கு வர முடியாது என்று பிடிவாதமாக மறுத்துள்ளார்.. இதனால் மனம் உடைந்த பிரபு, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பிரபுவை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இப்படியே போனால் சிக்கல்தான்.. கொரோனாவுக்கு எதிராக.. 3 முக்கிய வியூகங்களை மாற்றியாகனும்!இப்படியே போனால் சிக்கல்தான்.. கொரோனாவுக்கு எதிராக.. 3 முக்கிய வியூகங்களை மாற்றியாகனும்!

ஆனாலும் பிரபுவை காப்பாற்ற முடியவில்லை.. சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பரிதாபமாக பிரிந்தது. இதையடுத்து, பிரபுவின் தாய் போலீசில் புகார் தரவும், விசாரணை ஆரம்பமானது. அப்போதுதான் வீட்டுக்கு வந்து சோதனை நடத்தினர்.. அந்த ரூமில் பிரபு எழுதிய 3 பக்க லட்டர் ஒன்றையும் கைப்பற்றினர்.. அதில் அவர் எழுதியிருந்ததாவது:

"கல்யாணம் ஆனதில் இருந்தே எங்களுக்குள் பிரச்சனைதான்.. மாமியார் வீட்டிலும் நிறைய பிரச்சனை தந்தார்கள்.. எல்லாவற்றையும் பொறுத்து கொண்டுதான் குடும்பம் நடத்தினோம்.. இதற்கு என் ஊர் மக்களே சாட்சி. ஆடம்பரமான வாழ்க்கைக்கு என் மனைவி ஆசைப்பட்டு விட்டாள்.. அதனால் கோபித்துக் கொண்டு குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டாள்.

 lockdown crime: youth commits suicide over family problems near trichy

இதுதொடர்பான பேச்சுவார்த்தையின்போது என் மனைவியின் உறவினர்கள் என்னையும், என் குடும்பத்தையும் மிரட்டினர். எனவே, என் குடும்பத்தினரைக் காப்பாற்ற வேறு வழியில்லை.. அதனால்தான் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். அதற்காக நான் கோழை இல்லை.. அப்பாவி ஆண்களுக்கு எதிரான பெண் வன்கொடுமை சட்டத்துக்கு இது சமர்ப்பணம்" என்று எழுதி வைத்திருந்தார்.

 lockdown crime: youth commits suicide over family problems near trichy

இந்த கடிதத்தின் அடிப்படையில், தாமினி, அவரது பெற்றோர் உட்பட 7 பேர் மீது அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தாமினியின் பெற்றோரை கைது செய்தனர்.. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, அதை தர முடியாத விரக்தியில் கணவன் தற்கொலை செய்து கொண்டதும், அப்பாவி ஆண்களுக்கு எதிரான பெண் வன்கொடுமை சட்டம் இது என்று பிரபு பதிவு செய்திருப்பதும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

English summary
lockdown crime: youth commits suicide over family problems near trichy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X