திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நண்பர்களோடு நாடாளுமன்றத்தில் என்னவெல்லாம் செஞ்சேன் தெரியுமா? தம்பித்துரை பேட்டி

Google Oneindia Tamil News

திருச்சி: ஜெயலலிதா நினைத்ததுபோல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மேகதாது அணையை எதிர்த்து, நாடாளுமன்ற அவையை தாங்கள் 23 நாட்கள் முடக்கியதகாவும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அவை நடவடிக்கை குறித்து பட்டியலிட்டுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தம்பித்துரை பேசுகையில்,

lok sabha deputy speaker thambidurai list out what he achieved in parliament

"கரூர் மக்களவைத் தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்காகவும், தமிழகத்தின் கோரிக்கைகளுக்காகவும் நாடளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்துள்ளேன். குறிப்பாக கரூர் தொகுதியில் ஜவுளி தொழில் குறித்து பேசி உள்ளேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி எங்களது சக நண்பர்களோடு இணைந்து 23 நாட்கள் நாடாளுமன்ற அவையை முடக்கி வெற்றி பெற்றுள்ளோம்.

ஜெயலலிதா நினைத்ததுபோல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்தது. அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதனை எதிர்த்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் போராடினோம். இதையடுத்து மத்திய அரசும் உச்சநீதிமன்றத்தில் அணைகட்ட அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையை விமர்சிக்க பாஜகவுக்கு அருகதை கிடையாது... கனிமொழி எம்.பி காட்டம்திமுக தேர்தல் அறிக்கையை விமர்சிக்க பாஜகவுக்கு அருகதை கிடையாது... கனிமொழி எம்.பி காட்டம்

அதிமுக, பாஜக கூட்டணியானது மக்கள் விரும்புகிற கூட்டணி, நான் போட்டியிடும் கரூர் மக்களவைத் தொகுதி மட்டுமல்லாது தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி

எம்.ஜி.ஆர். தொடங்கிய இந்த இயக்கத்தை தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சிறப்பாக வழிநடத்தி செல்கிறார்கள். அவர்கள் மக்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்கள். ஆகவே மக்கள் ஆதரவு எங்களுக்கு உண்டு" இவ்வாறு பேசினார்.

English summary
lok sabha deputy speaker thambidurai list out what he achieved in parliament
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X