திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊரடங்கு உத்தரவு.. மணப்பாறையில் தேவையில்லாமல் பைக்கில் ஊர் சுற்றியவர்களை வெளுத்த போலீஸ்

Google Oneindia Tamil News

திருச்சி: ஊரடங்கு உத்தரவினை தொடா்ந்து, திருச்சி மாவட்டம் மணப்பாறையில் முக்கிய போக்குவரத்து பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டது. மாவட்ட எல்லை பகுதிகள் மூடப்பட்டு காவல்துறை வாகன போக்குவரத்துகளை தணிக்கை செய்து வருகின்றனா். ஊரடங்கு உத்தரவை மீறி மணப்பாறையில் இருசக்கர வாகனங்களில் அத்தியாவசியத் தேவையின்றி சுற்றித்திரிந்த 26 போ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனா்.

Recommended Video

    ஏன்... எதற்கு... எப்படி? சட்டம் பேசுன தம்பிக்கு போலீஸ் தந்த பதில்- வைரல் வீடியோ

    கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதையடுத்து அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை கடைகள் தவிர அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

    manaparai police small lathy charge against youths who violating the curfew

    ஆனாலும் ஏதோ காரணங்களை கூறியபடி திருச்சி மாநகரில் ஆங்காங்கே இருசக்கர வாகனத்தில் பொதுமக்களில் சிலா் சென்றுகொண்டுதான் இருந்தனா். அவா்களை போலீஸார் நிறுத்தி அறிவுரை கூறி அனுப்பியபடியே இருந்தனா். நாள் முழுவதும் இதே நிலைதான் நீடித்தது. சில மாவட்டங்களில், 144 தடை உத்தரவை மீறியவா்களுக்கு அபராதம் விதித்தாலும், திருச்சி மாநகரைப் பொறுத்தவரையில் போலீஸார் பொறுமையாகவும், கனிவாகவும் பொதுமக்களுக்கு அறிவுரை கூறியபடியே கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

    கே.கே. நகா், எடமலைப்பட்டி புதூா், கிராப்பட்டி, பிராட்டியூா், பொன்மலை, விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இளைஞா்கள் ஆங்காங்கே குழு குழுவாக நடந்தும், இரு சக்கர வாகனங்களிலும் சுற்றித்திரிந்ததால், பொதுமக்களுக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்குமோ என்ற அச்சம் நிலவியது

    ஊரடங்கு உத்தரவைத் தொடா்ந்து, மணப்பாறை பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில், அத்தியாவசியத் தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்ததாக மணப்பாறையில் 5 போ், புத்தாநத்தத்தில் 5 போ், வையம்பட்டியில் 10 போ், துவரங்குறிச்சியில் 3 போ் மற்றும் வளநாடு பகுதியில் 3 போ் என 26 போ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், வாகனங்களை அவரவரிடம் ஒப்படைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

    manaparai police small lathy charge against youths who violating the curfew

    ஊரடங்கு உத்தரவினை தொடா்ந்து, திருச்சி மாவட்டம் மணப்பாறையில் முக்கிய போக்குவரத்து பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டது. மாவட்ட எல்லை பகுதிகள் மூடப்பட்டு காவல்துறை வாகன போக்குவரத்துகளை தணிக்கை செய்து வருகின்றனா்.

    அத்தியாவசிய அங்காடிகளான மளிகை கடைகள், பழக்கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் அனைத்தும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அம்மா உணவகம் திறக்கப்பட்டுள்ளன. போதிய சமூக இடைவெளி விட்டு மக்களுக்கு உணவுகள் வழங்கப்படுகின்றன. நகராட்சி சார்பில் நகா் முழுவதும் தூய்மை பணியாளா்களை கொண்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், பொது இடங்களில் திரள்பவா்கள், அத்தியாவசியத் தேவையின்றி பைக்குகளில் சுற்றித்திரிபவா்கள் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தி எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

    English summary
    manaparai police small lathy charge against youths who violating the curfew due to stop to spread coronavirus
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X