திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விநாயகர் சதுர்த்தி: திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு மெகா கொழுக்கட்டை படையல் ரத்து

Google Oneindia Tamil News

திருச்சி: விநாயகர் சதுர்த்தியான இன்று திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு மெகா கொழுக்கட்டை படையல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    Nithyananda ரிலீஸ் செய்த Kailasa Gold Currency மற்றும் Kailasa Gold Coins | Oneindia Tamil

    திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெறும். அன்று காலை மலைக்கோட்டை மேல் உள்ள உச்சிப்பிள்ளையாருக்கும், கீழே உள்ள மாணிக்க விநாயகருக்கும் தலா 75 கிலோ வீதம் 150 கிலோ எடை கொண்ட மெகா கொழுக்கட்டை தயார் செய்து படையல் செய்வது வழக்கம்.

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அதிகாலை முதலே மலைக்கோட்டைக்கு பக்தர்கள் வர தொடங்குவார்கள். இதற்காக இரு நாட்களுக்கு முன்பே கோவில் மடப்பள்ளி பணியாளர்கள் கொழுக்கட்டை தயாரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். பச்சரிசி, மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள், நெய், தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, பின்னர் அவற்றை இருபங்காக பிரித்து துணியில் கட்டி பெரிய பாத்திரத்தில் வைத்து தொடர்ந்து 24 மணிநேரம் ஆவியில் வேக வைப்பார்கள்.

    பக்தர்களுக்கு அனுமதியில்லை

    பக்தர்களுக்கு அனுமதியில்லை

    இந்தநிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பெரிய கோவில்களிலும் கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

    கொழுக்கட்டை படையல் ரத்து

    கொழுக்கட்டை படையல் ரத்து

    இதன் காரணமாக மலைக்கோட்டை கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழக்கமாக நடைபெறும் மெகா கொழுக்கட்டை படையல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கொழுக்கட்டை தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் யாரும் ஈடுபடவில்லை. மேலும், விநாயகர் சதுர்த்தியன்று மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    உச்சிப்பிள்ளையார் கோவில்

    உச்சிப்பிள்ளையார் கோவில்

    ஆனால் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் அலங்கார மின்விளக்குகள் போடப்பட்டுள்ளது.தினசரி நடைபெறும் பூஜைகள் மட்டுமே நடைபெற்றது. பக்தர்களுக்கு அனுமதி இல்லை இதனால் வெறிச்சோடி காணப்பட்டது.

    பன்னிரு திரவிய அபிஷேகம்

    பன்னிரு திரவிய அபிஷேகம்

    திருச்சி மேலரன் சாலையில் உள்ள ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் விநாயகப் பெருமானுக்கு பன்னிரு வகையான திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை,

    English summary
    Mega kolukattai padayal canceled for Trichy malaikottai Uchchipillaiyar due to corona lockdown. Decorative lights have been installed at the malaikottai Uchchipillaiyar temple for the vinayagar Chaturthi festival. Only daily pujas were held. Devotees were not allowed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X