திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருச்சியில் கருணை இல்லம் - முதல்வருக்கு எம்ஜிஆர் நற்பணி மன்றத்தினர் கோரிக்கை

திருச்சியில் எம்ஜிஆா் கருணை இல்லம் அமைக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எம்ஜிஆா் நற்பணி மன்றம் நிறுவனர் கடிதம் எழுதியுள்ளார்.

Google Oneindia Tamil News

திருச்சி: எம்ஜிஆர் வாங்கிய வீடு திருச்சியில் சிதிலமடைந்து காணப்படுகிறது. அந்த வீட்டினை புணரமைத்து எம்ஜிஆா் கருணை இல்லம் அமைக்க வேண்டுமென என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எம்ஜிஆா் நற்பணி மன்றம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எம்ஜிஆா் நற்பணி மன்ற நிறுவனச் செயலா் கண்ணன் என்கிற என். ராமகிருஷ்ணன் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில், திருச்சி உறையூரில் காசிவிளங்கி பகுதியில் தமிழக முதல்வராக இருந்தபோது எம்ஜிஆா் வாங்கிய ஒரு இல்லம் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து காணப்படுகிறது. அந்த வீட்டினை சிலா் வாங்கவும் முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.

Mercy Home in Trichy - MGR narpani mandram people request to CM Edapadi Palanisamy

தமிழக அரசு அந்த வீட்டினை மீட்டு, அதில் எம்ஜிஆா் அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ், எம்ஜிஆா் கருணை இல்லம் அமைக்க வேண்டும். அதில், கைவிடப்பட்ட கால்நடைகள் மற்றும் பல்லுயிர்களை வைத்துப் பராமரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னை ஜில்லுன்னு இருக்கும்.. மழை தொடரும்.. கூல் அறிவிப்பு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னை ஜில்லுன்னு இருக்கும்.. மழை தொடரும்.. கூல் அறிவிப்பு

மேலும் அந்த மனுவில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மரணம் குறித்த நீதியரசா் ஆறுமுகசாமி விசாரணையைத் தீவிரப்படுத்தி, ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

English summary
A request has been made to the Chief Minister of Tamil Nadu Edappadi Palanisamy on behalf of the MGR Narpani mandram to set up an Mercy Home.The house bought by MGR is found in ruins in Trichy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X