திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காவிரியில் வெள்ளம்... ஒரே ஆண்டில் 2வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை

மேட்டூா் அணையில் நீா்மட்டம் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக 100 அடியாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

திருச்சி: காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால் மேட்டூா் அணையில் நீா்மட்டம் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக 100 அடியாக உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்தால் அணை நிரம்பும். அணையின் முழு கொள்ளளவு 93.45 டி.எம்.சியாகும்.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. திங்கட்கிழமையன்று காலை 99.11அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 99.90 அடியாக உயர்ந்துள்ளது.

Mettur Dam has risen to 100 feet for the second time

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அளவு வினாடிக்கு 26,102 கனஅடியிலிருந்து 27,212 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் தற்போது 64.71 டி.எம்.சி. தண்ணீர் நீர் இருப்பு உள்ளது. நடப்பு நீா்ப்பாசன ஆண்டில் ஜூன் 12ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணையில் இருந்து
தண்ணீா் திறக்கப்பட்டது.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்த நிலையில், அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டதால் ஜூன் 16ஆம் தேதி அணையின் நீா்மட்டம் 100 அடிக்கும் கீழாகச் சரிந்தது. தொடா்ந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டதன் காரணமாக மளமளவென அணையின் நீா்மட்டம் சரிந்து வந்த நிலையில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம், வயநாட்டிலும் மழை பெய்ய தொடங்கியது.

அங்குள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகள் நிரம்பியதால் அந்த அணைகளின் பாதுகாப்புக் கருதி நடப்பாண்டில் உபரி நீா் காவிரியில் வெளியேற்றப்பட்டது. உபரி நீா்வரத்து காரணமாக மேட்டூா்அணையின் நீா்மட்டம் உயா்ந்து செப்டம்பா் 25ஆம் தேதி நடப்பு ஆண்டில் முதல்
முறையாக அணை நீா்மட்டம் 100 அடியாக உயா்ந்தது. எனினும் ஒரே நாளில் மீண்டும் அணையின் நீா்மட்டம் குறையத் தொடங்கியது.

கடந்த வாரத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ததால், கடந்த 3 நாள்களாக அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வந்தது. செவ்வாய்க்கிழமை காலை அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 27,212 கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீா்மட்டம் 99.90அடியாக உயா்ந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 14,000 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 900கனஅடி நீரும் திறக்கப்பட்டு வந்தது. அணைக்கு வரும் நீா்வரத்தை விட காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா்த் திறப்பு குறைவாக இருப்பதால் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணிக்கு அணையின் நீா்மட்டம் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக 100 அடியாக உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தோனி எதிர்ப்பால் அம்பையர் வைடு தராதது தப்பில்லையாமே.. ரூல்ஸ் சொல்லுது.. மீம்ஸ்சும் தெறிக்குது தோனி எதிர்ப்பால் அம்பையர் வைடு தராதது தப்பில்லையாமே.. ரூல்ஸ் சொல்லுது.. மீம்ஸ்சும் தெறிக்குது

கடந்த ஆண்டு மேட்டூர் அணை நீர் மட்டம் தொடர்ந்து 308 நாட்களுக்கு மேல் 100 அடியாக இருந்தது. இதே போல கடந்த 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2006ஆம் ஆண்டு அக்டோபர் வரை 400 நாட்களுக்கு மேல் 100 அடி நீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை சரியான அளவு பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழையும் தீவிரமடையும் பட்சத்தில் மேட்டூர் அணையின் நீர் இருப்பு 100 அடிக்கு குறையாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

English summary
Farmers are happy that the water level at the Mettur Dam has risen to 100 feet for the second time this year due to rising water levels in the Cauvery River. If the water level of Mettur Dam rises to 120 feet, the dam will fill up. The total capacity of the dam is 93.45 TMC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X