திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்ரீரங்கத்தில் ஏழைகளுக்கு தலா 5 கிலோ அரிசியை வழங்கிய அமைச்சர் வளர்மதி

Google Oneindia Tamil News

திருச்சி: ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியை அமைச்சர் எஸ்.வளர்மதி வழங்கினார்.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வேண்டுகோள் ஏற்று திருச்சி புறநகர் மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் ஒன்றியத்தில் நேற்று எரங்குடி, சேதுராப்பட்டி, சோமரசம்பேட்டை பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் கழக அமைப்புச் செயலாளரும் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஏற்பாட்டின் பேரில் ஏழை மக்களுக்கு ஒவ்வொரு ஊராட்சிக்கு நேரிடையாக சென்று நிவாரணப் பொருட்களான தலா 5 கிலோ அரிசியை நேரில் சென்று வழங்கினார்.

Minister Valarmathi distributes 5 kg of rice for poor

அதேபோல் மணிகண்டம் ஒன்றியம் கே. கள்ளிக்குடியில் உள்ள அம்பேத்கர்நகரில் இருக்கூடிய பொது மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை ஒவ்வாரு குடும்பத்திற்கும் தலா 5 கிலோ நயம் பொன்னி அரிசியை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி வழங்கினார்.

தொடர்ந்து அமைச்சர் வளர்மதி தினமும் ஶ்ரீரங்கம் தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் நேரிடையாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவாரணம் பொருள்களை வழங்கி வருகிறார்.

இதில் மணிகண்டம் ஒன்றிய கழக செயலாளர் எஸ்.பி. முத்துகருப்பன், கே கள்ளிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் கே.எஸ்.சுந்தரம், ஒன்றிய குழு உறுப்பினர் அமிர்தம் நல்லுசாமி,கே. கள்ளிக்குடி ஊராட்சி கழக செயலாளர் மகேஷ்வரன், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் வளர்மதிநடராஜன், ஜெயலலிதா சண்முகம் மற்றும் அம்பேத்கர் நகர் கிளை கழக நிர்வாகிகள் பங்கேற்றார்கள்.

English summary
Minister Valarmathi distributes 5 kg of rice for the poor in Srirangam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X