திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருச்சியில் ஏழை மக்களுக்கு நிவாரணம் அளித்த அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாலக்கரை பகுதியை சேர்ந்த 500 பேருக்கு 25 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வார்டு வாரியாக நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். இந்த வகையில் திருச்சி மாநகராட்சி 18வது வார்டு பாலக்கரை பகுதியில் உள்ள மக்களுக்கு ஏழைகளுக்கு 25 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை நேற்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.

 Ministers Vellamandi Natarajan, Valaramathi help for the poor

கொரோனா வைரஸ் தொற்று தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், படிப்படியாக ஊரடங்கு மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கே கஷ்டப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனைப்படியும், தமிழ்நாடு அரசு சார்பிலும், அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் தாங்களாக முன்வந்து நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

 Ministers Vellamandi Natarajan, Valaramathi help for the poor

அந்த வகையில் திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிவாரணப் பொருட்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறார். அவரது கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வார்டு வாரியாக நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். அதன் படி திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியின் உள்ளடக்கிய 19 வார்டு பகுதியான பாலக்கரை பகுதியை சார்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு வெல்லமண்டி என் ஜவஹர்லால் நேரு ஏற்பாட்டில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் நேற்று அரிசி, முட்டை, மற்றும் 20 வகையான மளிகைப் பொருட்கள் கொண்ட நிவாரண தொகுப்பினை வழங்கினார்.

நாக்பூர் டூ பிதார்... நடந்தே வந்த ஆலங்குளம் தொகுதிவாசி... ஊருக்கு அழைத்து வந்த பூங்கோதை ஆலடி அருணாநாக்பூர் டூ பிதார்... நடந்தே வந்த ஆலங்குளம் தொகுதிவாசி... ஊருக்கு அழைத்து வந்த பூங்கோதை ஆலடி அருணா

இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் சமூக இடைவெளியுடனும், முகக் கவசம் அணிந்தும் பொருட்களை வாங்கிச் சென்றனர். ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நடுஅம்மாபேட்டை, பூலாங்குளத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு மக்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்பாக 1000 நபர்களுக்கு 5 கிலோ அரிசியினை நேற்று அமைச்சர் எஸ். வளர்மதி நிவாரண பொருட்களாக வழங்கினார்.

English summary
Ministers Vellamandi Natarajan and Valaramathi in Trichy helps for the poor those who are without jobs and money during this lockdown.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X