திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மயங்கி கிடக்கும் சுஜித் அம்மா.. சோகத்தில் குடும்பம்.. இந்த நர்ஸ் ஏன் இப்படி சிரிக்கணும்?

சுஜித்தின் பெற்றோருக்கு திமுக தலைவர் ஆறுதல் சொன்னார்

Google Oneindia Tamil News

Recommended Video

    சுஜித்தை மீட்க ராணுவத்தை ஏன் அழைக்கவில்லை? மு.க.ஸ்டாலின் கேள்வி-வீடியோ

    மணப்பாறை: சுஜித்தின் அம்மா மயங்கி கிடக்க.. அவருக்கு பக்கத்தில் ஒரு நர்ஸ் சிரித்தமேனிக்கு உள்ளார். இந்த படம் அனைவரின் பார்வையிலும் பட்டு உறுத்தி கொண்டு உள்ளது.

    இன்று காலை சுஜித் இறந்ததாக அறிவிக்கப்பட்டதுமே திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு வந்தார். கார் மூலம் நடுக்காட்டுப்பட்டிக்கு சென்றார்.

    mk stalin met sujiths parents

    அங்கு சுஜித்தின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு சுஜித் விழுந்த ஆள்துளை கிணறு பகுதியை பார்வையிட்டார். பிறகு சுஜித்தின் பெற்றோர் ஆரோக்கியராஜ்- கமலாமேரியை சந்தித்து ஆறுதல் கூற அவர்களது வீட்டுக்கு சென்றார்.

    குழந்தை குழிக்குள் விழுந்ததில் இருந்தே, சுஜித்தின் அம்மா மயக்க நிலையிலேயே உள்ளார். யாராலும் அவரை சமாதானப்படுத்த முடியவில்லை என்பதைவிட, அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே புரியாமல் கண்கலங்கி நின்றனர்.

    திமுக தலைவர் ஸ்டாலின் சுஜித் வீட்டுக்குள் நுழையும்போதும் மேரி மயக்க நிலையில்தான் இருந்தார். அவரை ஒரு கட்டிலில் படுக்க வைத்திருந்தனர். பக்கத்திலேயே மருந்து மாத்திரைகள் வைக்கப்பட, சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. அதற்கான நர்ஸ்களும் அங்கே இருந்தனர். அனேகமாக இவர்கள், மீட்பு பணியிடத்துக்கு வந்திருந்த மருத்துவர் குழுவாக இருக்கும் என தெரிகிறது.

    கயிறு, பலூன், ரோபோட், சிலிண்டர் கேமரா.. எல்லாமே தோல்வி.. எங்கு தவறு நடந்தது.. ஏன் இப்படி ஆச்சு?கயிறு, பலூன், ரோபோட், சிலிண்டர் கேமரா.. எல்லாமே தோல்வி.. எங்கு தவறு நடந்தது.. ஏன் இப்படி ஆச்சு?

    திமுக தலைவர் ஸ்டாலின் மேரியின் உடல்நலம் குறித்து விசாரித்து கொண்டிருக்க, ஒரு நர்ஸ் அங்கே சிரித்தபடி காணப்பட்டார். அவரது சிரிப்பை பலரும் கவனித்து போட்டோவும் எடுத்துள்ளனர். குழந்தையை அடக்கம் செய்து ஒருசில மணி நேரமே ஆகியிருந்த சமயம் அது.

    மயக்க நிலையில் பெற்ற தாய் விழுந்து கிடக்க.. ஆறுதல் சொல்ல ஒரு தலைவர்அமர்ந்திருக்க.. எதற்காக இந்த நர்ஸ் சிரிக்க வேண்டும் என்று தெரியவில்லை. அதற்கான அவசியமோ, அவசரமோ, காரண காரியமோ அங்கே நடந்திருக்க வாய்ப்பில்லை.

    எத்தனையோ தாய்மார்கள், மேரியின் மனநிலை அறிந்து 5 நாட்களாக ராப்பகலாக கண்கலங்கி கொண்டிருந்த சூழலில், சம்பவ இடத்திலேயே நர்ஸ் சிரித்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது. பெண்ணாக மட்டுமல்ல.. ஒரு நர்ஸ் என்ற முறையிலும் இவர் செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது!

    English summary
    sujith rescue operation failure: dmk leader mk stalin met sujith parents
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X