திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலின் ஒருபோதும் பின்வாங்கவில்லை.. பாஜக அரசுதான் பயந்துடுச்சு.. உதயநிதி ஸ்டாலின்

Google Oneindia Tamil News

Recommended Video

    TN BJP tweets about DMK | ஓட்டுக்கு மட்டும் இந்தி தேவையா?.. திமுகவை கலாய்க்கும் பாஜக!

    திருச்சி: இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட அறிவிப்பில் இருந்து ஸ்டாலின் ஒருபோதும் பின்வாங்கவில்லை ஆளுநர் அழைத்துப் பேசியதால் தான் போராட்டம் கைவிடப்பட்டது என உதயநிதி ஸ்டாலின் திருச்சி விமானநிலையத்தில் தெரிவித்தார்.

    திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க வின் போராட்ட அறிவிப்புக்கு மத்திய பாஜக அரசு பயந்து விட்டது. இது தொடர்பாக தி.மு.க தலைவரை ஆளுநர் அழைத்து பேசியதே திமுக போராட்ட அறிவிப்பிற்கு கிடைத்த வெற்றிதான். இந்த போராட்டம் தொடர்பாக ஸ்டாலின் பின் வாங்கவில்லை. ஆளுநர் அழைத்து பேசியதால் தான் போராட்டம் கைவிடப்பட்டது.

    MK Stalin never backed down to hindi imposition protest: udhayanidhi stalin

    எந்த நிலையிலும், ஹிந்தி திணிக்கப்பட்டால், கருணாநிதி வழியில் நின்று எதிர்ப்போம். தபால் நிலைய, ரயில் நிலைய தேர்வுகளை, தமிழில் நடத்த போராடினோம்; மத்திய அரசு, அந்த உத்தரவை திரும்ப பெற்றது. தற்போது, நாங்கள் அறிவித்த போராட்டத்தை தொடர்ந்து, விளக்கம் கொடுக்கப்பட்டிருப்பது, தி.மு.க.,விற்கு கிடைத்த வெற்றி
    இவ்வாறு அவர் கூறினார்.

    நிர்மலா சீதாராமனின் ஒரே பேட்டி.. ஓஹோவென்று உயர்ந்த பங்குச் சந்தைகள்.. சென்செக்ஸ் தாறுமாறுநிர்மலா சீதாராமனின் ஒரே பேட்டி.. ஓஹோவென்று உயர்ந்த பங்குச் சந்தைகள்.. சென்செக்ஸ் தாறுமாறு

    உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்த போது திருச்சி மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் மற்றும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    English summary
    dmk youth wing secretary udhayanidhi stalin said Stalin never backed down to hindi imposition protest MK Stalin never backed down to hindi imposition protest
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X